டயட் சோடா குடிச்சா எடை குறையுமா? ஆய்வில் திடுக் ரிப்போர்ட்

கார்பன் டை ஆக்ஸைட் அடங்கிய பானங்கள், உடலில் உள்ள பசியைத் தூண்டக் கூடிய க்ரெலின் என்ற ஹார்மோனை தூண்டி செயல்பட வைக்குது.

உடல் எடையை குறைக்க சிலர் டயட்டை பின்பற்றுகிறார்கள். இதற்காக டயட்சோடா அருந்துபவர்கள் ஏராளம். இந்நிலையில், டயட் சோடா அருந்தினால் உடல் குறையாதென்றும், மாறாக அவை எடையை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உடல் எடையைக் குறைக்க விரும்புகின்றவர்கள், இந்த டயட் சோடாக்களை மற்ற கார்பனேட்டட் குளிர்பானங்களுக்கு மாற்றாக எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த டயட் சோடாவானது ஆரோக்கியமானதுன்னு நினைச்சு பலர் குடிக்குறாங்க. அப்படி மக்கள் நினைப்புக்கு ஆப்பு வைக்குற மாதிரி ஒரு ரிப்போர்ட் கிடைத்திருக்கிறது. பாலஸ்தீனத்தில் உள்ள பிர்ஜித் பல்கலைகத்தில் செய்த ஆய்வு தான் அது. ஆய்வின் முடிவில, சோடா டயட் அருந்துபவர்களுக்கு வெயிட் குறையாதாம். அதுக்கு பதிலா அவங்களுக்கு எக்ஸ்ட்ரா தான் வெயிட் போடுமாம். அதாவது காற்றூட்டப்பட்ட சோடாக்களை அருந்துவதால் பசி ஏற்படுவதோடு, அதன் விளைவாக அதிகமாக சாப்பிட தோன்றுகிறதாம்.

கார்பன் டை ஆக்ஸைட் அடங்கிய பானங்கள், உடலில் உள்ள பசியைத் தூண்டக் கூடிய க்ரெலின் என்ற ஹார்மோனை தூண்டி செயல்பட வைக்குது. எலிகளை வைத்து சோதனை செய்த போது, இந்த முடிவு தெரியவந்தது.

கலோரிகள் இல்லாத பானங்களை எலிகளுக்கு கொடுத்து ஒரு வருஷமா சோதனை செய்தபோது, அவைகளோட உடலில் வெயிட் அதிகச்சிருக்குது. அதாவது, அதுகளோட உடலில் கொழுப்பு சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல மனிதர்களிடமும் சோதனை நடத்தியதில் ரிசல்ட் நெகடிவா தான் வந்திருக்கிறது என ஆராய்சியாளர்கள் தெரிவிச்சிருக்காங்க.

×Close
×Close