முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சமீபத்தில் நாயகி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த வீடியோவில் தன் வீட்டின் கிச்சன், பூஜையறை இடங்களைக் காட்டினார். அந்த கிச்சன் இப்போது இருக்கும் மாடர்ன் கிச்சனை போல இல்லாமல், மண்பானை, அம்மிக்கல் என சிம்பிளாக இருந்தது. துர்கா தன் கணவருக்கு மிகவும் பிடித்த மீன்குழம்பு சமைத்துக் கொண்டு இருந்தார்.
அப்போது பேசிய துர்கா, எனக்கு திருமணம் முடித்து வந்தபோது எனக்கு எதுவுமே சமைக்க தெரியாது, என்னுடைய மாமியார், அண்ணியிடம் தான் சமைக்க கத்துக்கிட்டேன். அப்போ அடிக்கடி விறகடுப்பில் சமைப்போம். வீட்டுல பெரும்பாலும் காரம் அதிகம் சேர்க்க மாட்டோம். மாமனார் அசைவம் நல்ல சாப்பிடுவாரு. அவருக்கு காரம் பிடிக்காது. அதனால எப்போதும் அவருக்கு தனி சமையல் தான்.
எப்போதும் மஞ்சள், சீரகம், மிளகாய் எல்லாம் வெயிலில் காய வைத்து அரைத்து, அந்த மசாலா தான் சமையலுக்கு யூஸ் பண்ணுவோம். கிருத்திகா காரமணி பிரியாணி, தாய்க்கறி சூப்பரா சமைப்பாங்க. அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் மருமக பிரியாணின்னா சாருக்கு ரொம்ப பிடிக்கும் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்த வீடியோ யூடியூபில் வைரல் ஆகியது. மேலும் முதல்வரின் மனைவியாக இருந்தும் துர்காவும், அவரது வீட்டு கிச்சனும் மிகவும் எளிமையாக இருப்பதை பார்த்து பலரும் பாராட்டினர்.
தற்போது இந்த வீடியோவின் இரண்டாம் பகுதி வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், துர்கா ஸ்டாலின் சமைக்கும் போது தற்செயலாக அவரது மாப்பிள்ளை கிச்சனுக்கு வருகிறார். அப்போது உங்களுக்கு அத்தை சமையல்ல என்ன பிடிக்கும் என தொகுப்பாளினி கேட்க, அதற்கு அவங்க செய்யிற வெஜிடேரியன் சமையல் எல்லாமே ரொம்ப பிடிக்கும். சாம்பார், அவுங்க பண்ற வெந்தய ரசம் எனக்கு பிடிக்கும். பிறகு ஸ்டோர் ரூம் சென்ற துர்கா அங்கே வைத்திருக்கும் சாப்பாடு அரிசி, இட்லி அரிசி எல்லாம் காண்பிக்கிறார்.
மளிகை சாமான் எல்லாம் மாதம் ஒருமுறை வாங்கி வச்சுக்குவோம். மிளகாய்தூள் எல்லாம் நாங்களே வீட்டுல அரைச்சுக்குவோம். வரகு, சாமை, குதிரைவாலி, திணை எல்லாமே யூஸ் பண்ணுவோம் என பல விஷயங்களை துர்கா ஸ்டாலின் நாயகி யூடியூப் சேனலுக்கு அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோ பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“