ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய ப்ளாஸ்டிக் சுற்றுச் சூழலுக்கு மிகவும் ஆபத்தாக இருந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்தாண்டு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய ப்ளாஸ்டிக்கிற்கு அரசு தடை விதித்தது. இருப்பினும் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வில்லை. அந்த வகையில் அன்றாட வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிப்பது இளநீர், ஜூஸ் குடிக்கப் பயன்படுத்தும் ஸ்ட்ரா பொருள். நம்மில் பலரும் பிளாஸ்டிக் ஸ்ட்ராவில் இளநீர், ஜூஸ் குடித்திருப்போம். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Advertisment
ப்ளாஸ்டிக் மாற்றாகவும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாக வகையிலும் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எவ்லோஜியா ஈகோ கேர் நிறுவனம் தென்னை ஓலையில் இருந்து ஸ்ட்ரா தயாரித்து புதுமை சேர்த்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த தம்பதி மணிகண்டன் குமரப்பன்- ராதா எவ்லோஜியா ஈகோ கேர் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். DW Tamil யூடியூப் தளத்தில் அவர்கள் இந்த நிறுவனம் குறித்து கூறியுள்ளனர்.
எவ்லோஜியா ஈகோ கேர் நிறுவனர் மணிகண்டன் குமரப்பன் கூறுகையில், "ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய ப்ளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஸ்ட்ரா அதிகம் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது. நாங்கள் தென்னை வியாபாரம் செய்து வந்தோம். அப்போது நாங்களும் ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தினோம். அது பாதிப்பு ஏற்படுத்தும் எனத் தெரிந்து பின்னர் பேப்பர் ஸ்ட்ரா கொடுத்தோம். அதில் சில சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் தென்னையில் இருந்து ஸ்ட்ரா தயாரிக்கும் யோசனை கிடைத்தது. தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்படுத்த முடியும். காய்ந்த ஓலை மட்டும் பயன்படுத்த மாட்டோம். நாங்கள் அதை வைத்து ஸ்ட்ரா செய்தோம். Capacity, Self Life என அனைத்தும் அதில் இருந்தது. இது மட்கக் கூடிய பொருள். அதிலும் மிக முக்கியம் இதன் மூலப் பொருட்கள் எளிதாக கிடைக்கிறது. அதனால் இந்த யோசனை" என்று கூறினார்.
Advertisment
Advertisements
குமரப்பன் மனைவி ராதா இணை நிறுவனர் கூறுகையில், "2018-ல் நிறுவனத்தை தொடங்கினோம். அப்போது ஒரு நாளைக்கு 150 ஸ்ட்ரா மட்டும் உற்பத்தி செய்ய முடிந்தது. இப்போது எங்களால் 8,000- 10,000 ஸ்ட்ரா உற்பத்தி செய்ய முடிகிறது. முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இங்கு வேலை செய்கிறார்கள். 20 பெண்கள் வேலை செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இருந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தென்னை ஓலை இங்கு அனுப்பபடுகிறது. பெங்களூருரிவில் உற்பத்தி செய்கிறோம். 7 கட்டமாக ஸ்ட்ரா உற்பத்தி செய்யப்படும். 1. Cleaning. 2. segregation 3. Flexibility 4. Rolling 5. Drying 6. Quality 7. Packing என 7 விதமாக Process செய்யப்படுகிறது" என்றார்.
தொடர்ந்து குமரப்பன் கூறுகையில், "அரசிடம் இருந்து முறையான உரிமம் பெற்று தொழில் செய்கிறோம். 3 வெளிநாடுகளிலும் உரிமம் பெற்றுள்ளோம். ஸ்ட்ரா அளவை பொறுத்து ரூ.1.50 முதல் ரூ.3 வரை விற்பனை செய்கிறோம்.
இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 15 கோடி ஸ்ட்ரா பயன்படுத்துகிறோம். நாங்கள் 10 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்கிறோம். நாங்கள் இதை மாற்றத்தை நோக்கிய ஒரு அடியாக பார்க்கிறோம்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“