Advertisment

4 பொருள்... 2 நிமிடம்.... ஈஸியான கீட்டோ சீஸ் கேக் ரெடி!

யூ-ட்யூபர் கீட்டோ மில்லினியலின் இந்த எளிதான செய்முறையைப் பாருங்கள், இதற்கு வெறும் 4 பொருட்களும் சரியாக 2 நிமிடங்களும் போதும்!

author-image
WebDesk
New Update
keto cheese cake

கீட்டோ சீஸ் கேக்

Easy Keto Cheese Cake: சீஸ்கேக் சற்று காஸ்ட்லியாகவும், டயட்டை பாதிக்கக் கூடிய வகையிலும் இருக்கலாம். இந்த இரண்டுக்கும் இடையே ஒரு தீர்க்கமான முடிவெடுப்பதில் நீங்கள் குழம்பி போயிருக்கலாம். ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக ஒரு அற்புத தீர்வு எங்களிடம் உள்ளது!

Advertisment

யூ-ட்யூபர் கீட்டோ மில்லினியலின் இந்த எளிதான செய்முறையைப் பாருங்கள், இதற்கு வெறும் 4 பொருட்களும் சரியாக 2 நிமிடங்களும் போதும்!

தேவையான பொருட்கள்

1 - மீடியம் முட்டை

அரை தேக்கரண்டி - வெண்ணிலா எசென்ஸ் (சர்க்கரை இல்லாதது)

3 டீஸ்பூன் - கிரீம் சீஸ்

1 டீஸ்பூன் - சர்க்கரை இல்லாத இனிப்பு

செய்முறை

* கோப்பையில் 3 டீஸ்பூன் கொழுப்பு இல்லாத கிரீம் சீஸை மென்மையாக அடிக்கவும்.

* அடுத்து, ஒரு நடுத்தர அளவிலான முழு முட்டையையும் சேர்த்து, அது மென்மையான பேஸ்டாக மாறும் வரை அடிக்கவும். இப்போது 1 தேக்கரண்டி சர்க்கரை இல்லாத வெண்ணிலா எசென்ஸ் மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை இல்லாத இனிப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

* இப்போது அதை மைக்ரோவேவ் சேஃப் கப்பிற்கு மாற்றி 90 விநாடிகள் பேக்  செய்யுங்கள். பின்னர் அதை குளிர்விக்கவும். ஆறியதும் கத்தியைப் பயன்படுத்தி ஓரங்களை கீறி விடவும். இதனால் கோப்பையிலிருந்து கேக் எளிதாக வெளியே வரும்.

* அதை ஒரு தட்டுக்கு மாற்றி, சில சாக்லேட் கனாச்சே தூறல் அல்லது உங்களுக்கு விருப்பமான ஃப்ரெஷ்ஷாக நறுக்கிய பழங்களுடன் அதை சாப்பிட்டு மகிழவும்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Food Recipes Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment