நீங்க வெறும் டம்ளர் மற்றும் ஐஸ் கட்டி, உளுந்து வைத்து இந்த வடையை செய்ய முடியும். குறிப்பிட்ட நேரத்தில் 50 வடைக்கு மேலாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து – 200 கிராம்
ஐஸ் கட்டிகள்: 15 கட்டிகள்
சீரகம் – அரை ஸ்பூன்
மிளகு- ஒரு ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கொஞ்சம் கருவேப்பிலை நறுக்கியது
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
எண்ணெய்
செய்முறை : உளுந்தை நன்றாக கழுவி, நல்ல தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து அதை வடிகட்டி ஈரப்பதம் இல்லாதவாறு எடுத்துகொள்ளவும். உளுந்துடன், ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த உளுந்து மாவில், அரிசி மாவை சேர்த்துகொள்ளவும். அதை நன்றாக கைவிட்டு கலந்துகொள்ளவும். இதில் சீரகம், ,மிளகு, நறுக்கிய கருவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகொள்ளவும். இதை நன்றாக கலந்து விடவும். வீட்டில் டீ குடிக்கும் கப் மீது சின்ன கார்டன் துணியை கட்டிக்கொள்ளவும் அதற்கு மேலே, சிறிய பிளாஸ்டிக் கவரை கட்டிக்கொள்ளவும். அதற்கு மேலாக மாவை வடை போல தண்ணீர் தொட்டு வடையை தட்டி எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். 10 நிமிடங்களுக்குள் 100 வடை வரை செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“