பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை விலைக்கு வாங்கி இறைச்சியை ஏழைகளுக்கு கொடுத்துள்ளார்.
Advertisment
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை செழிப்பாகக் கொண்டாடப்பட்டது.
இறை தூதர் எனப் போற்றப்படும் இப்ராஹிமின் அர்ப்பணிப்பும், புனிதத்துவமும் நிறைந்த வாழ்வை எண்ணி, அவர்தம் தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நினைவு நாளாக இந்த ‘பக்ரீத்’ கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் என இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு பலியிட்டு (குர்பானி) அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த காளையை இறைவனுக்கு பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார்.
அஃப்ரிடி காளையை பிடித்து நடந்து செல்லும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது இப்போது வைரல் ஆகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil