முகாமில் இருக்கும் குட்டி யானைகளை சிறப்பாகப் பராமரிப்பேன்; தமிழ்நாட்டின் முதல் பெண் காவடி பெள்ளி
எந்த யானையின் காவடியாக பெள்ளி பொறுப்பு ஏற்பார் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள் என்று முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறினர்,
எந்த யானையின் காவடியாக பெள்ளி பொறுப்பு ஏற்பார் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள் என்று முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறினர்,
ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்’ ஆவணப்பட புகழ் பழங்குடியினப் பெண்ணான வி பெள்ளி, தமிழ்நாட்டின் முதல் பெண் காவடி (யானை பாகனுக்கு உதவியாக யானைகளைப் பராமரித்துக் கொள்ளும் பணி) என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Advertisment
‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது.
ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன் மற்றும் காவடியால் (பராமரிப்பாளர்) பராமரிக்கப்பட்டு வருகின்றது. முகாம்களில் உள்ள யானைகளை தனிகவனத்துடன் அவர்கள் பராமரித்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
தற்போது, தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றிவரும் வி. பெள்ளியை, ஆதரவற்ற யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையை கருத்தில்கொண்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் காவடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி பெள்ளிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பணி நியமன ஆணையை வழங்கினார், என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
எந்த யானையின் காவடியாக பெள்ளி பொறுப்பு ஏற்பார் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள் என்று முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறினர்.
பெள்ளியும் அவரது கணவர் கே.பொம்மனும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்காட்டில், கைவிடப்பட்ட யானைக் குட்டிகளான பொம்மி மற்றும் ரகுவை பராமரித்து வந்தனர். ஒரு பெண், காவடி ஆனது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம் என்று , சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கூறினார்.
பெள்ளி தனது புதிய பொறுப்பில் பல யானைகளை கவனித்துக் கொள்ள வேண்டும், ஆனால் அவள் இதயம் குட்டிகளுடன் இருக்கும் என்று கூறுகிறார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், காவடி வேலை செய்வதைத் தவிர, முகாமில் இருக்கும் குட்டிகளை நான் சிறப்பாகப் பராமரிப்பேன் என்று அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொம்மன் கூறுகையில், ’சனிக்கிழமை நமது யானைகள் முகாமுக்கு இந்திய குடியரசுத் தலைவர் வரவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றபோது அவரை அழைத்திருந்தோம், என்றார்.
நீலகிரி மாவட்டம் முதுமலைப் பகுதியைச் சேர்ந்த பொம்மன் (52)., வனத்துறையில் 1984-ம் ஆண்டு முதல் யானைப் பாகனாக பணியாற்றி வருகிறார். வனத்துறை வழிகாட்டுதல்படி முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் யானைகள் பராமரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி பெள்ளியும் யானைகள் பராமரிப்பில் பொம்மனுடன் தொடர்ந்து பயணிப்பவர்.
இந்த தம்பதி, முதுமலை முகாமிற்கு வரும் யானை குட்டிகள், உடல் நலம் பாதித்த யானைகள் என பலதரப்பட்ட யானைகளை பராமரிப்பதில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள்.
காட்டுநாயகன் சமூகத்தைச் சேர்ந்த இந்த தம்பதியின் உண்மை கதையை வெளிக்கொண்டு வந்த 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறு ஆவணப்படம், ஆஸ்கர் விருது வென்றதை அடுத்து பொம்மன், பெள்ளி தம்பதி உலகம் முழுவதும் பிரபலமாகினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“