Advertisment

சென்னையில் இருந்து 3 மணி நேரம்தான்! பிரியதர்ஷினி மாலத்தீவு டைரீஸ்

பிரியதர்ஷினி சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyadarshini

Priyadarshini

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி. 20 ஆண்டுகளை கடந்தும் இன்றும், தமிழகத்தின் டாப் தொகுப்பாளினியாக இருக்கிறார். இவரது அக்கா பிரியதர்ஷினி. இவரும் முன்பு பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் தான். ஒரு சில படங்கள், பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Advertisment

திருமணத்துக்கு பிறகு டிவியில் இருந்து பிரேக் எடுத்த பிரியதர்ஷினி, நம்ம வீட்டு பொண்ணு சீரியல் மூலம் மீண்டும் சீரியலுக்கு ரீஎண்ட்ரி கொடுத்தார். இப்போது சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.

இப்போது பல டிவி பிரபலங்கள் மாலத்தீவுக்கு டூர் செல்வது ஃபேஷனாகி விட்டது. பிரியதர்ஷினியும் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவுக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலிலும் அரபிக் கடலிலும் மாலத்தீவு அமைந்துள்ளது.

பார்க்கும் திசையெங்கும் அழகிய கடல், நெஞ்சைக் கவரும் இயற்கைக் காட்சிகள், அழகான கடற்கரைகள், கடலுக்கு அடியில் உணவு, ஆழ்கடல் நீச்சல் என தன்னைத் தேடி வருபவரின் மனங்களை புத்துணர்ச்சியாக்கும் எல்லா அழகியலையும் கொண்டது தான் மாலத்தீவு.

இது, இந்தியப் பெருங்கடலில் 20க்கும் அதிகமான பவளத்தீவுகளையும், 1000க்கும் அதிகமான சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய தீவு நாடு. மாலத்தீவின் அழகில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

மாலத்தீவு முழுக்க முழுக்கச் சுற்றுலா மூலமாகக் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.

மாலத்தீவிற்கு சென்னையிலிருநந்து விமானம் மூலம் செல்லலாம். 3 மணி நேரப் பயணம்தான். சீசனுக்கு ஏற்ப டிக்கெட் விலை. குறைந்தது ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் வரை ஆகலாம். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கப்பல் மூலமாகவும் மாலத்தீவிற்கு செல்லலாம். ஆனால், 2 நாட்கள் பயணம் இருக்கும்.

என்ன! அடுத்த விடுமுறைக்கு நீங்களும் உங்க குடும்பத்தோட ஜாலியா மாலத்தீவுக்கு ஒரு டூர் போயிட்டு வாங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment