Knee Pain Simple Exercises- நமது மொத்த உடலையும் தாங்கி பிடிப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால். உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தால், மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு முழங்கால் வலி வரும். மூட்டுகளுக்கு வலுசேர்க்கும் உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது மூலம் இந்த வலியைத் தவிர்த்து விடலாம்.
முழங்கால் வலியை சரி செய்ய உதவும் எளிமையான உடற்பயிற்சிகள்
வழக்கமான உடற்பயிற்சி உங்கள் மூட்டுகளை மிருதுவாக வைத்திருக்கவும், நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கவும் உதவும். இது மூட்டுகளின் உயவு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. காயங்களைத் தடுக்க உடற்பயிற்சிக்கு முன் வார்ம்-அப் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உடல் செயல்பாடு குறைவதால் எடை கூடும். இது முழங்கால்கள் போன்ற முக்கிய மூட்டுகளில் சுமையை அதிகரிக்கிறது, இது மூட்டு வலியை ஏற்படுத்தலாம் அல்லது மோசமாக்கலாம். உடல் எடையைக் குறைப்பது வலியைத் தடுக்க உதவும்.
நீரிழப்பு’ சோர்வு மற்றும் தசை வலியை ஏற்படுத்தும். போதுமான திரவ உட்கொள்ளலை பராமரிக்கவும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி’ உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன், போதுமான அளவு ஆரோக்கியமான சமச்சீர் உணவு, எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.
அதிகப்படியான உப்பு, சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும். உங்கள் உணவில் இருந்து போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைக்கவில்லை என நீங்கள் நினைத்தால், சப்ளிமெண்ட்ஸ் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்கலாம்.
ஹாட் வாட்டர் பேக் அல்லது எலக்ட்ரீக் ஹீட்டிங் பேட் பயன்படுத்துவது ஆறுதல் அளிக்கும். சூடான குளியல்' தசைகளை தளர்த்தவும் உதவும். கடுமையான காயங்கள் அல்லது சுளுக்கு ஏற்பட்டால், ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது நல்லது.
இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை இரவிலேயே நீரில் ஊறவைத்துவிட வேண்டும். காலையில் இந்த நீரைச் சாப்பிட்டுவர, முழங்கால் மூட்டுப் பிரச்னைகள் குணமாகும். வெந்தயத்தைத் தண்ணீரில் கலந்து பேஸ்ட்போலச் செய்து அதை வலியுள்ள இடத்தில் பூசலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.
எள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை உருவாக்கி, முடக்கு வாதத்தையும் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். எள்ளிலுள்ள தாமிரம்' எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் அடிப்படையாக அமையும் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை இணைக்கிறது.