குளு குளு மழைக் காலம்... உங்க பெட்ரூம் கதகதப்பாக சூப்பர் டிப்ஸ்; நீங்களும் ட்ரை பண்ணுங்க!

குளிர்காலத்தில் சில்லுனு இருக்கும் உங்க பெட்ரூமை கதகதப்பாக எப்படி மாற்றலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

குளிர்காலத்தில் சில்லுனு இருக்கும் உங்க பெட்ரூமை கதகதப்பாக எப்படி மாற்றலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
bedroom

மழைக்காலம் தொடங்கிவிட்டது. இனி எங்கு தொட்டாலும் சில்லென்று ஈரப்பதத்துடன் தான் இருக்கும். பாத்திரங்க, கதவுகள்,கட்டில் என எல்லா இடங்களும் குளிர்ச்சியாக தான் இருக்கும். இந்த நேரம் நம் உடலுக்கு ஒரு வித நடுக்கத்தை கொடுக்கும். சிலருக்கு மழைக்காலத்தில் உடல் நிலை சரியில்லாமல் போய்விடும். சிலருக்கு பல நோய்கள் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Advertisment

அதுமட்டுமல்லாமல், நாம் ஒய்வெடுக்கும் அறைகள் கூட இந்த நேரத்தில் சில்லென்று தான் இருக்கும். இதனால் நமக்கு தூக்கம் கூட வராது. அந்த வகையில் நாம் படுக்கும் அறையை குளிர்க்காலத்தில் இதமாக வைத்திருக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். அது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

வழிமுறைகள்

  • குளிர் காலத்தில் பகல் பொழுதில் நன்றாக வெய்யில் அடிக்கும் பொழுது சூரிய வெளிச்சம் படும்படியாக நம் அறையின் கதவை நன்றாக திறந்து வைக்க வேண்டும்.  இதனால் அறையில் வெப்பம் தங்கும். பிறகு மாலை நான்கு மணி அளவில் கதவுகளை மூடிவிட்டால் அறை நல்ல கதகதப்பாக இருக்கும். நல்ல தூக்கமும் வரும்.
  • மழைக்காலத்தில் வெயில் அடிக்கும் போது நம் பயன்படுத்தும் மெத்தை, தலையணை ஆகியவற்றை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளலாம். இதனால், தலையணை,மெத்தை போன்றவை குளிர்ச்சியாக இல்லாமல் சற்று சூடாக இருக்கும். இதனால் நமக்கு இரவில் நல்ல தூக்கம் வரும்.
  • மழை மற்றும் குளிர் காலங்களில் ஸ்டீல் கட்டில்களை விடுத்து, மரக்கட்டில்களில் படுத்து உறங்குவது குளிர் உணர்வைத் தவிர்க்க உதவும்.
  • வீட்டில் இரண்டு அடுக்கு கொண்ட உயரமான மெத்தைகள் இருந்தால் அதை குளிர்க்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் அந்த மெத்தை நமது உடலுக்கு தேவையான சூட்டை கொடுக்கும்.
  • தேங்காய் நார்களைக் கொண்டு செய்யப்படும் மெத்தை மற்றும் சோபா செட்டுகள் நல்ல கதகதப்பு கொடுக்கும். அதனால் அவற்றை குளிர் காலத்தில் பயன்படுத்தலாம்.
  • பாலியஸ்டர் போன்ற செயற்கை இழை பொருட்களையும் குளிர்காலத்தில் பயன்படுத்த வேண்டும். அவை வெப்பத்தைத் தக்க வைத்து உடலை சூடாக உணர வைக்கும்.
  • சாதரணமாகவே நாம் குளிர்க்காலத்தில் ஏ.சி மற்றும் ஃபேன் போன்றவற்றை பயன்படுத்த மாட்டோம். இதனால், குளிர் காலத்தில் சற்று இழுத்துப் போர்த்திக்கொண்டு நிம்மதியாக தூங்க முடியும். அதற்கு திக்கான போர்வைகளை பயன்படுத்துவது நல்லது. இது குளிரை குறைப்பதுடன், சளி பிடிப்பதையும் தவிர்க்கும்.
  • அடர் நிறம் கொண்ட படுக்கை விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது. இது வெப்பத்தை உறிஞ்சி படுக்கையறையை சூடாக உணர வைக்கும். பகலில் அறையை சூடாக வைத்திருக்க உதவும். இரவிலும் நல்ல கதகதப்பைத் தரும்.
  • குளிர்க்காலத்தில் கத கதப்பிற்காக நாம் படுக்கும் அறையில் கனல்களை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து அவ்வப்போது குளிர்காயலாம். இது ரூமை கதகதப்பாக வைக்க உதவும்.மேலும் சாம்பிராணி புகையை அறையில் போடுவதன் மூலம் கொசு தொல்லைகளை குறைக்கலாம், அறையும் கதகதப்பாக இருக்கும். இந்த வழிமுறைகளை மேற்கொள்ளும் பொழுது கவனமாக செய்ய வேண்டும்.
Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: