புஷ்பவனம் குப்புசாமி-அனிதா தம்பதியின் மூத்த மகளுக்கு நிச்சயதார்த்தம்: போட்டோஸ் வைரல்!

குப்புசாமி- அனிதா தம்பதியின் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார். இவருக்கு கெளதம் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

pushpavanam kuppusamy daughter got engagement photo

பிரபல நாட்டுப்புற பாடக தம்பதிகளான புஷ்வனம் குப்புசாமி- அனிதா தம்பதியினரின் மூத்த மகளுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும் கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  

குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களையும் வழங்கினர்.

அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் இவர்களது வீட்டின் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார். இவருக்கும், ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. சென்னையில் உள்ள பிரபல லீலா பேலஸில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த இளம் ஜோடிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Famous folk singer pushpavanam kuppusamy daughter got engaged photos goes viral on social media

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express