scorecardresearch

பெருந்தன்மை காட்டிய ஸ்டாலின்; மகிழ்ச்சியில் திளைக்கும் புஷ்பவனம் குப்புசாமி குடும்பம்!

பிரபல நாட்டுப்புற பாடக தம்பதிகளான புஷ்வனம் குப்புசாமி- அனிதா தம்பதியினரின் மூத்த மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினார்.

pushpavanam kuppusamy anitha
pushpavanam kuppusamy anitha daughter wedding

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களையும் வழங்கினர்.

அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார். இவருக்கும், ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் கடந்த ஆண்டு இறுதியில், நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது. இவர்களது ப்ரீ-வெட்டிங் டீசரை கூட, சில தினங்களுக்கு முன்’ அனிதா தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் பல்லவிக்கும், கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்’ பிப்.20 அன்று திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்த புகைப்படங்கள் எல்லாம் இப்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது.

அனிதா குப்புசாமி கடந்த 2013-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார். அந்த நேரத்தில் அவர் ஜெயா டிவி.யில் சமையல் கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பிறகு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2018-ல் அக்கட்சியில் இருந்து விலகினார்.

ஆனாலும் ஸ்டாலின் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல்’ அனிதா குப்புசாமி மகளின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தியதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.

மேலும் மகளின் திருமணம் அன்று நடந்த நிகழ்வுகளை அனிதா தனது யூடியூபில் நேரலையாக பதிவிட்டார். இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த இளம் ஜோடிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Famous singer pushpavanam kuppusamy anitha daughter wedding mk stalin wishes