சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான கதாநாயகியாக இருக்கிறார்.
டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது, அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற பல நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார். பின்னர் அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார். ஆனால் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான்.
ஃபரினா தனது நீண்டகால காதலரான ரஹ்மான் உபைத்தை கடந்த நவம்பர் 2017 இல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு, சயன் லாரா ரஹ்மான் என்ற அழகான ஆண்குழந்தை உள்ளது.
இப்போது ஃபரினா தன் கணவருடன் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில்’ ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் ஏற்கெனவே இதே நிகழ்ச்சியின் சீசன் 1ல் பங்கேற்று ஆரம்பத்திலேயே, எலிமினேட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பிஸியாக இருக்கும் ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அப்படி ஃபரினா சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா பதிவு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
அந்த வீடியோவில் கிறிஸ்துவ திருமண முறையின்படி, வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் கவுன் போட்டு, எடுப்பான மேக்கப் உடன் ஃபரினா பார்க்க அழகாக இருக்கிறார். அந்த மணக்கோலத்துடன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கைத் துணையாக ஏற்கின்றேன் பாடலுக்கு ரீல்ஸ் செய்திருக்கிறார்.
அதைப்போல இந்து முறையின் படி, சிவப்பு நிற பட்டுப்புடவை, ஆரி வொர்க் செய்த ஜாக்கெட், கழுத்து நிறைய நகைகள் என மணப்பெண் லுக்கில் அம்சமாக இருக்கிறார். இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“