சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான கதாநாயகியாக இருக்கிறார்.
டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது, அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார். பின்னர் அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார். ஆனால் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான்.
ஃபரினா தனது நீண்டகால காதலரான ரஹ்மான் உபைத்தை நவம்பர் 2017 இல் திருமணம் செய்தார். இப்படி சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தான் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு முக்கியமான கட்டத்தையும் ஃபரினா தவறாமல் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ஃபரினாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய குழந்தைக்கு சயன் லாரா ரஹ்மான் என பெயரிட்டு, விதவிதமாக போட்டோஷூட்கள் எடுத்து அதையெல்லாம் ஃபரினா இன்ஸ்டாவில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் எல்லாமே பயங்கர வைரலாகியது.
இப்போது ஃபரினா சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா பதிவும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
அதில் தன்னுடைய மகன் முதல் பிறந்தநாளை துபாயில் வைத்து ஃபரினா கொண்டாடி உள்ளார்.
எங்கள் குழந்தையின் பிறந்தநாளை பெரிதாக்க நினைத்தோம், அதனால் அதை பெரிதாக்கினோம்! துபாய்க்கு எங்களின் முதல் சர்வதேச பிறந்தநாள் பயணம் ❤️ துபாயில் ஜெய்னின் பிறந்தநாள்
என் ஒரே மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நான் பூமியில் பிறந்ததற்குக் காரணம் நீதான் என்று கூறி, ஃபரினா இன்ஸ்டாவில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மேலும் துபாயின் மெரினா குரூஸ் படகில் சென்ற வீடியோ, அங்கு எடுத்த போட்டோஷூட்களையும் ஃபரினா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“