விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் வெண்பாவாக நடித்து தமிழம் முழுவதும் பிரபலமானவர் ஃபரினா ஆசாத்.
சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பிஸியாக இருக்கும் ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அப்படி ஃபரினா சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா பதிவு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
அதில், ‘புது வருடத்தில் புது நான், போஸ்ட் போட்டே ஆகணும்ல பா, அதான வழக்கம்’ என்று ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஃபரினா பார்லருக்கு சென்று தன்னுடைய கூந்தலை ஃபெதர் கட் ஸ்டைலில் வெட்டி, கலரிங் செய்து, பார்க்கவே புது தோற்றத்தில் இருக்கிறார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் உங்க நீளமான முடியை என் கட் பண்ணீட்டிங்க என்று கேட்டு வருகின்றனர்.
ஒருமுறை ஃபரினா தனது முடி பராமரிப்பு ரகசியம் குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது பகிர்ந்து கொண்டார்.
அதில், தினமும் தலைக்கு குளிக்கவே கூடாது. நீங்கள் எவ்வளவு வேலை பார்த்தாலும் வாரத்துக்கு மூன்று முறை தலை கழுவினால் போதும். எண்ணெய் வைப்பதால், வறண்ட முடி, மிருதுவாக மாற ஆரம்பிக்கும். அதேபோல, தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க கூடாது.
பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், வைட்டமின் – ஈ மாத்திரை வாங்கி, இந்த மூன்று ஆயிலையும், வைட்டமின் ஈ மாத்திரையுடன் நன்றாக மிக்ஸ் பண்ணி யூஸ் பண்ணலாம்..
பீர் கொண்டு தலைமுடியை கழுவினால் முடி மிருதுவாக, துள்ளலாக இருக்கும். முதலில் பீரை கூந்தலில் தேய்த்து, பிறகு ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும்.
சின்ன வெங்காயம் ஜூஸ் அல்லது பேஸ்டை, தலையின் முடி குறைவாக இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்யலாம். முக்கியமான விஷயம். 10 நிமிடங்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. இப்படி பல குறிப்புகளை ஃபரினா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“