மழைக்காலத்திலும் ‘ஃபிட்டாக’ இருக்க வேண்டுமா? 10 வழிமுறைகள்

காலையில் எழுந்தவுடன் ஓட்டப்பயிற்சி செய்தால் அந்நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம். விரைவில் வியர்வையை வரவழைக்கக் கூடிய பயிற்சி என்றால் அது ஓட்டம் தான்.

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என பலவித உடற்பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு மழைக்காலம் பல சிரமங்களை ஏற்படுத்தும். மழை பெய்தால் நடைபயிற்சி கூட மேற்கொள்ள முடியாது. நம் சாலைகளை பற்றி சொல்ல வேண்டுமா? எவ்வளவுதான் கடினப்பட்டு உடற்பயிற்சி செய்தாலும், உடலிலிருந்து வியர்வை ‘வரவே மாட்டேன்’ என அடம்பிடிக்கும். துரித உணவுகள், மழைக்கு இதமான உணவுகளை எல்லாம் சாப்பிட்டு அஜீரண கோளாறுகளும் ஏற்படும். ஆனாலும், ரீபோக் பயிற்சியாளர் ககன் அரோரா கூறும் இந்த வழிமுறைகளைக் கையாண்டால், நீங்கள் மழைக்காலத்திலும் ஃபிட்டாக இருக்க முடியும்.

1.எழுந்து ஓடுங்கள்:

காலையில் எழுந்தவுடன் ஓட்டப்பயிற்சி செய்தால் அந்நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம். மழைக்காலத்தில், விரைவில் வியர்வையை வரவழைக்கக் கூடிய பயிற்சி என்றால் அது ஓட்டம் தான்.

2. நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருங்கள்:

மழைக்காலத்தில் வெளியில் சென்று உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வது சிரமமாக இருந்தால், வீட்டினுள் இருந்தபடியே 30-40 நிமிடங்கள் ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். வீட்டில் செய்யும் உணவுகளுடன் அந்த பருவத்தில் விளையும் பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

3. கூலாக உணரும் வகையில் உடைகளை அணியுங்கள்:

நீங்கள் எந்த நிறத்திலான உடைகள் அணிந்தால் கூலாக உணர்வீர்களோ அத்தகைய உடைகளை அணிந்து உடற்பயிற்சி செய்யும்போது நீங்கள் எளிதில் சோர்ந்துவிட மாட்டீர்கள்.

4.பயணத்திற்கு தயாராகுங்கள்:

நீண்ட நடைபயணம், ஜாலியான வெளியில் விளையாடக்கூடிய விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

5.வைட்டமின் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்:

உற்சாகமாக இருக்க உணவில் வைட்டமின் சத்துள்ள உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு ஓய்வெடுக்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே இருந்துவிடுவது நல்லது.

HealthifyMe.com-ஐ சேர்ந்த பயிற்சியாளர் மீனாட்சி சுப்பிரமணியம் தரும் வழிமுறைகள் இவை.

6. நாள்தோறும் உடற்பயிற்சிக்கென ஒரே நேரத்தைக் கடைபிடியுங்கள். 45 நிமிடத்திற்கு குறையாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

7. முதலில் ஐந்து நிமிடத்திற்கு வார்ம்-அப் செய்யுங்கள். அதன்பிறகு நின்ற இடத்திலேயே ஜாகிங் செய்யலாம். ஸ்கிப்பிங், படி ஏறுதல், ஜம்பிங் ஆகிய சின்ன சின்ன பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

8. க்ரஞ்சஸ், காலுக்கு என சில உடற்பயிற்சிகள், வீட்டிற்குள்ளேயே நடத்தல் உள்ளிட்ட எளிமையான சில உடற்பயிற்சிகளை செய்யலாம்.

9.வீட்டினுள்ளேயும், வெளிப்புறத்திலும் யோகா மேற்கொள்ளலாம். காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும். சில எளிமையான ஆசனங்களை மேற்கொள்ளும்போது மூச்சு பிரச்சனைகள் குணமாகும்.

10.வீட்டிற்குள்ளேயே டான்ஸ் ஆடலாம். ஏரோபிக்ஸ், சும்பா நடனம் ஆகியவற்றை செய்யலாம்.

×Close
×Close