புதினா, கொத்தமல்லி இப்படி வச்சா ஃபிரிட்ஜில ரொம்ப நாள் ஃபிரெஷா இருக்கும்

செஃப் விகாஸ் கண்ணா மூலிகைகளின் ஆயுளை அதிகரிக்க ஒரு சூப்பர் தந்திரத்தைப் பகிர்ந்துள்ளார்.

lifestyle
How to keep herbs fresh for long

நீங்கள் என்னதான் சுவையாக சமைத்தாலும், அதற்கு இறுதியில் மனமும் சுவையும் சேர்ப்பது புதினாவும், கொத்தமல்லிதழையும் தான். பிரியாணியோ, சாம்பாரோ, ரசமோ கொத்தமல்லி தழை இல்லாமல் சமையல் முழுமையடையாது.

சில நேரங்களில் புதினா, கொத்தமல்லி எப்படித்தான் பாதுகாப்பாக சேமித்தாலும் சீக்கிரமே வாடிவிடும் அல்லது அழுகிவிடும். ஆனால் இனி கவலையில்லை.

செஃப் விகாஸ் கண்ணா மூலிகைகளின் ஆயுளை அதிகரிக்க ஒரு சூப்பர் தந்திரத்தைப் பகிர்ந்துள்ளார். 8-10 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் மூலிகைகளை புதியதாக வைத்திருக்க இது சிறந்த தந்திரம், என்று அவர் கூறினார்.

இதோ அந்த வீடியோ

நீங்கள் செய்ய வேண்டியது ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் மூலிகையின் தண்டு தண்ணீரில் நனையுமாறு வைக்கவும். அதை வீடியோவில் காட்டியபடி, டம்ளருடன் அப்படியே வைத்து, ஒரு பிளாஸ்டிக் பையில் மூடி வைக்கவும். ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் தண்ணீரை மாற்றவும், என்று அவர் பரிந்துரைத்தார்.

அடுத்தமுறை புதினா, கொத்தமல்லை ஃபிரிட்ஜில இப்படி ஸ்டோர் பண்ணுங்க..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Food hack how to keep herbs fresh for long

Exit mobile version