சமைப்பது என்பது காய்கறிகளை வெட்டுவது மற்றும் உணவு தயாரிப்பது மட்டுமல்ல, அது அதையும் தாண்டி, பொருட்கள் மற்றும் உணவை புதியதாக வைத்திருப்பதையும் உள்ளடக்கியது.
Advertisment
இங்கு சில பயனுள்ள குக்கிங் ஹேக்ஸ் உள்ளன, அவை சமையலறையில் உங்களுக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும்.
கண்ணாடி கிளாஸ் வெடிக்காமல் இருக்க
பெரும்பாலும் நீங்கள் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒரு சூடான திரவத்தை ஊற்றினால், அது விரிசல்களை உருவாக்குகிறது. அது நிகழாமல் தடுப்பது எப்படி?
Advertisment
Advertisements
கண்ணாடி பாத்திரத்தில் சூடான பானத்தை ஊற்றுவதற்கு முன் ஒரு ஸ்டீல் ஸ்பூனை வைக்கவும். இது கண்ணாடி வெடிப்பதைத் தடுக்கும். கண்ணாடி வெப்பத்தின் மோசமான கடத்தி மற்றும் ஸ்டீல் ஒரு நல்ல வெப்ப கடத்தி.
எனவே, ஒரு சூடான பானத்தை ஒரு கிளாஸில் ஊற்றினால், அதன் உள்பரப்பு வெப்பமடைகிறது, அதே சமயம் அதன் வெளிப்புற பரப்பு குளிர்ச்சியாக இருக்கும் – இது விரிசல் ஏற்பட காரணமாகிறது. அதேசமயம், ஒரு ஸ்டீல் ஸ்பூனை அதன் உள்ளே வைத்தால், அது வெப்பத்தை உறிஞ்சி, விரிசல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
கறை நீங்க
காபி, டீ குடிக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.
அடுத்தமுறை கண்ணாடி கிளாஸ், பாத்திரங்களை பயன்படுத்தும் போது இந்த குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”