குற்றாலம் ஸ்பெஷல் நாட்டுக் கோழி சுக்கா!!!!! வேற லெவல்...

தென்காசி ஏரியாவில் உள்ள நந்தினி கூரைக்கடையில் செய்யுற நாட்டுக்கோழி சுக்காவை தேடி வந்து சாப்பிடாத சுற்றுலா வாசிகளே இருக்க மாட்டாங்க.

’நாட்டுக்கோழி’ இந்த பெயரை கேட்டாலே நம்மில் பலருக்கும் பசி எடுக்க ஆரம்பித்து விடும். தமிழ்நாட்டில் நாட்டுக்கோழிக் குழம்பு, நாட்டுக் கோழி வறுவல், நாட்டுக்கோழி சுக்கா ன்னு ஒரு மெனுவையையே அடுக்கலாம். அதோட ருசியே அலாதியானது.

கிராமப்பகுதிகளில் கை, கால் உடைந்து கட்டுப்போட்டு படுத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி அடித்து நல்லெண்ணெய் ஊற்றி சூப் குடிக்க கொடுப்பார்கள் அந்த அளவிற்கு சத்தானது நாட்டுக்கோழி. விடுமுறையின் போது நாம் சொந்த ஊருக்கு சென்றால், நம்ம தாத்தா உடனே நாட்டுக் கோழி அடிச்சி சூப் வச்சி தருவாங்க, அத ரசிட்சி, ருசிட்சி சாப்பிட்டவங்களுக்கு தெரியும் அதோட டேஸ்ட் என்னனு..

நாட்டுக்கோழியில இத்தனை வெரைட்டி செய்யலாம்னு கண்டுப்பிடிச்சதே நம்ம ஊர் பரோட்ட மாஸ்டர்கள் தான். அதிலையும், குற்றாலம் நாட்டுக் கோழி சுக்கா படு ஃபேமஸ். . தென்காசி ஏரியாவில் உள்ள நந்தினி கூரைக்கடையில் செய்யுற நாட்டுக்கோழி சுக்காவை தேடி வந்து சாப்பிடாத சுற்றுலா வாசிகளே இருக்க மாட்டாங்க. தலை வாழை இலையை விரித்து அதில முட்டையுடன் இவிங்க பரிமாற அழக பார்த்தாலே பாதி பசி போயிடும். அருவியில குளிச்சிட்டு வந்து சுடச்சுட சுக்காவ சாப்பிட கொடுத்தா எப்படி உள்ள இறங்கும் பாருங்க!!

சரி, நாவில் நீர் ஊறச் செய்யும் நாட்டுக்கோழி சுக்காவை வீட்டிலியே சமைத்துப் பார்க்க தயாரா…..

தேவையான பொருட்கள்: 

1.நாட்டு கோழி  – அரை கிலோ
2,சின்ன வெங்காயம் – 30
3.இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
4.மல்லித்தூள் – 3 ஸ்பூன்
5.மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
6.மிளகு – 1 ஸ்பூன்
7.சீரகம் – 1 ஸ்பூன்
8.கரம்மசாலா தூள் – 1 ஸ்பூன்
9.மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்

மசாலா பொருட்கள்:

1.தேங்காய்
2.கசகசா – 1 ஸ்பூன்
3.முந்திரிபருப்பு – 5
4.பட்டை – 2
5.கிராம்பு – 2

செய்முறை: 

1. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை , கிராம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,சேர்த்து நன்றாக வதக்கவும்.

2. பின்பு, அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, கறியை நாட்டுக் கோழி கறி சேர்த்து வதக்க வேண்டும்.

3. அதன் பின்பு, மல்லித்தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கறியை வேக வைக்க வேண்டும்.

4. தண்ணீர் வற்றியதும், அதில், தேங்காய்-மிளகு- சீரகம்-முந்திரி-கசகசா சேர்த்து அரைத்த பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

5. அதன் மேல் நல்லெண்ணெய் ஊற்றி பிரட்டி எடுக்க வேண்டும். கலவை சுண்டியவுடன், நறுக்கிய மல்லி இலை பதமாக இறக்கினால் நாட்டுக் கோழி சுக்கா ரெடி!!!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close