Advertisment

சில உணவுகள் ஃபிரிட்ஜில் விஷமாக மாறுமா? நிபுணர்கள் பதில்

ஆயுர்வேத டாக்டர் டிம்பிள் ஜங்தாவின் கூற்றுப்படி, சில உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கும்போது அவை "நச்சுத் தன்மையுடையதாக" மாறும்.

author-image
WebDesk
New Update
fridge storage tips

Fridge storage tips

ஃபிரிட்ஜ் பல சமையலறை பொருட்களுக்கு பாதுகாப்பான இடமாக உள்ளது. ஆனால் சில கெட்டுப் போகக்கூடிய உணவுகள் உள்ளன, அவற்றை நீங்கள் ஃபிரிட்ஜில் சேமிக்கக்கூடாது, ஏனெனில் அவை பூஞ்சைகளை உருவாக்கும்.

Advertisment

ஆயுர்வேத டாக்டர் டிம்பிள் ஜங்தாவின் கூற்றுப்படி, சில உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கும்போது அவை "நச்சுத் தன்மையுடையதாக" மாறும்.

பூண்டு

தோல் உரித்த பூண்டை ஒருபோதும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம், ஏனெனில் அது மிக விரைவாக பூஞ்சை பிடிக்கத் தொடங்குகிறது.

இது புற்றுநோயுடன் இணைக்கப்பட்டுள்ளது, என்று டாக்டர் ஜங்தா கூறினார். இருப்பினும், டாக்டர் திலீப் குடே (senior consultant physician, Yashoda Hospitals, Hyderabad), "ஃபிரிட்ஜில் சேமித்த பூண்டை உட்கொள்வதால், புற்றுநோய் வளர்ச்சியுடன் எந்த தொடர்பும் இல்லை, என்று குறிப்பிட்டார்.

எப்போதும் ஒரு தோல் உடன் இருக்கும் பூண்டு வாங்கவும். நீங்கள் அதை சமைக்கும் போது மட்டுமே தோல் உரிக்கவும், ஃபிரிட்ஜுக்கு வெளியே எப்போதும் வைக்கவும், என்று டாக்டர் ஜங்தா கூறினார்.

வெங்காயம்

வெங்காயம் குறைந்த வெப்பநிலையைத் தாங்கும் பயிர். நீங்கள் அதை ஃபிரிட்ஜில் வைக்கும் போது, ​​மாவுச்சத்து சர்க்கரையாக மாறத் தொடங்குகிறது மற்றும் பூஞ்சை பிடிக்கத் தொடங்குகிறது, என்று டாக்டர் ஜங்தா விவரித்தார்.

வெங்காயத்தின் பாதியை வெட்டி சமைத்து, மறுபாதியை ஃப்ரிட்ஜில் வைத்து நிறைய பேர் தவறு செய்கிறார்கள். அப்படி ஒருபோதும் செய்யக் கூடாது. இது சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களையும் சேகரிக்கத் தொடங்குகிறது, என்று டாக்டர் ஜங்தா கூறினார்.

இஞ்சி

டாக்டர் ஜங்தாவின் கூற்றுப்படி, நீங்கள் அதை ஃபிரிட்ஜில் வைக்கும் போது அது மிக விரைவாக பூஞ்சை பிடிக்கத் தொடங்குகிறது, மேலும் இது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்புகளுடன் தொடர்புடையது. அதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்.

அரிசி

white rice

மாவுச்சத்துக்கான எதிர்ப்பின் காரணமாக பலர் சமைத்த அரிசி சாதத்தை ஃபிரிட்ஜில் வைக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் இது கொழுப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையில், அரிசி மிக வேகமாக பூஞ்சை பிடிக்கும் பொருட்களில் ஒன்றாகும். நீங்கள் அதை ஃபிரிட்ஜில் 24 மணிநேரத்திற்கு மேல் வைக்க வேண்டாம் , என்று டாக்டர் ஜங்தா கூறினார்.

இதை ஒப்புக் கொண்ட டாக்டர் குடே, சமைத்த அரிசி சாதத்தை 24 மணிநேரத்திற்கு மேல் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது, ஏனெனில் இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை எளிதாக்கும். மீண்டும் சூடுபடுத்தப்பட்ட அரிசி சாதம் சாப்பிடுவது பசில்லஸ் செரியஸ் போன்றவற்றால் உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும், என்று கூறினார்.

வெளியில் இருக்கும்போது புதியதாக இருக்கும் வேறு சில உணவுகள்

டாக்டர் குடே பகிர்ந்து கொண்டவை:

*குடை மிளகாய் மற்றும் அவகோடோ பழங்களை அறை வெப்பநிலையில் காற்று புகாத கன்டெய்னரில் சேமிக்க வேண்டும்.

*வெள்ளரி   

*உருளைக்கிழங்கு ஃபிரிட்ஜில் வைத்தால் இனிப்பாகவும், கரகரப்பாகவும் இருக்கும். காற்றுப்புகாத கன்டெய்னரில் அறை வெப்பநிலையில் சேமிப்பது உதவும், என்று டாக்டர் குடே கூறினார்.

*ஆப்பிள்களை அறை வெப்பநிலையில் சுமார் ஒரு வாரத்திற்கு சேமித்து வைத்திருக்கலாம், அதன் பிறகு அவற்றை நீண்ட நேரம் சேமிக்க வேண்டியிருந்தால் ஃபிரிட்ஜில் வைக்கலாம்.

*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக் ரேப்பர் கொண்டு சுற்றி விட்டால், அவை நீடித்து நிலைத்து, வேகமாக பழுக்காமல் தடுக்கும்.

Mulberries

*பெர்ரிகளை ஃபிர்ட்ஜில் வைக்கக்கூடாது, அவை உலர்ந்தால் நீண்ட காலம் இருக்கும்.

* முலாம்பழங்களை வெளியே சேமித்து வைக்க வேண்டும் மற்றும் கட் செய்து, ஃபிரிட்ஜில் சேமிக்கலாம்.

* ஃபிரிட்ஜில் தேன் கடினமாகவும், கட்டியாகவும் மாறும், மேலும் சாக்லேட் சுவையற்றதாகவும் இருக்கும்.

சேமித்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் பாக்டீரியா மாசுபாட்டின் சாத்தியத்தை எவ்வாறு குறைப்பது

டாக்டர் குடே பின்வரும் நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொண்டார்

சேமிப்பதற்கு முன் நன்கு கழுவவும்

பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் நன்கு கழுவவும். குளிர்ந்த, சுத்தமான தண்ணீரில் அவற்றை கழுவவும்; தடித்த தோல் கொண்ட காய்கறிக்கு, பிரஷை பயன்படுத்தவும். இது பாக்டீரியா, பூச்சிக்கொல்லிகள் மற்றும் அழுக்குகளை அகற்ற உதவுகிறது.

சேமிப்பு

பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃபிரிட்ஜில் அதற்கான பிரிவுகளில் வைக்கவும். மாசுபாட்டைத் தவிர்க்க, அவற்றை பச்சை இறைச்சியில் இருந்து ஒதுக்கி வைக்கவும்.

வெப்பநிலை கட்டுப்பாடு

உங்கள் ஃபிரிட்ஜில் சரியான வெப்பநிலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமிப்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலை வரம்பு 32°F முதல் 40°F (0°C முதல் 4°C வரை) ஆகும்.

அடிக்கடி சுத்தம் செய்தல்

பாக்டீரியா மற்றும் அச்சு வளர்ச்சியைத் தவிர்க்க, ஃபிரிட்ஜை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்திருக்கும் அலமாரிகளை கவனியுங்கள்.

பொருத்தமான பேக்கேஜிங்

பாக்டீரியா மாசுபாட்டின் அபாயத்தைக் குறைக்கவும், வெட்டிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உலராமல் இருக்கவும், அவற்றை காற்று புகாத கன்டெய்னரில் சேமிக்கவும்.

Read in English: Do some foods turn ‘toxic’ when you refrigerate them? Experts weigh in

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment