பழங்கள், சீக்கிரம் அழுகிவிடும், ஆனால் Greenpod labs பாக்கெட், பழங்கள் விரைவில் கெட்டுப்போவதை தடுக்கும், அதுவும் ஃபிரிட்ஜ் இல்லாமல்.
Advertisment
என்ன! கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. சென்னையை சேர்ந்த Greenpod labs என்ற ஆராய்ச்சி நிறுவனம், வெவ்வேறு பழங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கிரீன்பாட்ஸ் லேப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் ராஜ்மோகன் DW Tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஃபிரிட்ஜ் வசதி இல்லாமல் பழங்களை பாதுகாக்கும் புதிய நுட்பம் குறித்து பேசினார்.
8 டிகிரி டெம்பிரேட்சர்ல சேமிப்பதுடன் ஒப்பிடும்போது பழங்களும், காய்கறிகளும் சாதரண அறை வெப்பநிலையில் இருக்கும் போது, அது கெட்டுப்போவதற்கான வாய்ப்பு 3, 4 மடங்கு அதிகமாக இருக்கும்.
நாங்க இந்த பிரொடக்ட் டெவலப் பண்ணும்போதே, இது ரூம் டெம்பிரேட்சர்ல வேலை செய்யணுங்கிறதுல ரொம்ப தெளிவான இருந்தோம். அறை வெப்பநிலையில அது கெட்டுப்போறதை கம்மி பண்ணனும்.
நாங்க டெவலப் பண்ணியிருக்கிற எல்லா பிரொடக்ட்ஸூம் 10 டிகிரில இருந்து 45 டிகிரி டெம்பிரேட்சர் வரைக்கும் காய்கறி, பழங்களை கெட்டுப்போகாம தடுக்கும்.
பழங்கள், காய்கறிகளை டிரான்ஸ்போர்ட் பண்ணும் போது, வியாபாரிகளுக்கு ரெண்டு விதமா பொருளாதார நஷ்டம் வருது.
இப்போ 100 கிலோ அனுப்புனா அதுல ஒரு 20 கிலோ ஸ்பாயில் ஆகுது. 80 கிலோதான் அவுங்களால விற்பனை செய்ய முடியுது. இன்னொன்னு அந்த 80 கிலோவுலயும் தரம் குறைஞ்சு போறதால அவுங்களுக்கு 100 ரூபாய் கிடைக்க வேண்டிய இடத்துல 80 ரூபாய் தான் கிடைக்குது. இந்த ரெண்டையும் நாங்க சரி பண்றோம் என்று தீபக் ராஜ்மோகன் கூறுகிறார்.
கிரீன்பாட்ஸ் லேப்ஸின் இந்த சிறிய பாக்கெட்டுகள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி அவை நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க உதவுகிறது.
இந்த குட்டி பாக்கெட்டுகள் மூலம் பழ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பயனடைவார்கள் என்று இந்த ஆராய்ச்சி நிறுவனம் நம்புகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“