Advertisment

ஒரே கொடியில் இத்தனை பீர்க்கங்காய், ஃபிரெஷ் பாலக்கீரை: நடிகை சீதா மாடித் தோட்டம் வீடியோ                                              

சீதா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் மாடித் தோட்டத்தில் காய்கறி அறுவடை செய்யும் வீடியோவை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Seetha

Actress seetha instagram

புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சீதா, சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார்.

Advertisment

அதில் இவரது மாடித்தோட்ட வீடியோக்கள் மிக பிரபலம். முதலில் சில செடிகளை நடவு செய்த சீதா, மாடித்தோட்டம் குறித்து சில விஷயங்களை தெரிந்து கொண்ட பிறகு, தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, பீர்க்கங்காய், கேரட், பீன்ஸ் என முப்பதுக்கும் மேற்பட்ட காய்கறி, பழவகை மரங்களை வளர்த்திருக்கிறார். மேலும், பல வகையான கீரைகளும், பூச்செடிகளையும் வளர்க்கிறார். பூச்சிவிரட்டிகளை இவரே தயாரித்துப் பயன்படுத்துகிறார்.

சீதா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் மாடித் தோட்டத்தில் காய்கறி அறுவடை செய்யும் வீடியோவை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

அப்படி சீதா சமீபத்தில் பகிர்ந்த மாடித்தோட்ட வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது..

இங்கே பாருங்க…

இப்படி சீதா, கத்தரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பாலக்கீரை என அனைத்தையும் சீதா சொந்தமாக மாடித் தோட்டத்தில் நடவு செய்து, அதை அழகாக பராமரித்தும் வருகிறார்…

இதெல்லாம் கொஞ்சம் தான், அவர் மாடித் தோட்டத்தில் இஞ்சி, தக்காளி, அவரை, பச்சை மிளகாய், பாவக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மஞ்சள், தர்பூசணி, மல்பெர்ரி என நிறைய பயிரிட்டுள்ளார்..

உங்களுக்கு சீதா மாடித் தோட்டம் பிடிச்சிருக்கா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment