Gardening ideas | உங்கள் தோட்டத்தில் மரம் செடி, கொடிகளில் இருந்து கீழே விழுந்த காய்ந்த இலைகள், சருகுகளை பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Gardening ideas | உங்கள் தோட்டத்தில் மரம் செடி, கொடிகளில் இருந்து கீழே விழுந்த காய்ந்த இலைகள், சருகுகளை பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
தோட்டம் உங்கள் வீட்டை அழகுபடுத்துகிறது. அதிலும் தோட்டக்கலை என்பது கழிவுகளை மதிப்புமிக்க ஒன்றாக மாற்றுவதாகும். எனவே உங்கள் தோட்டத்தில் மரம் செடிகளில் இருந்து விழுந்த காய்ந்த இலைகள், சருகுகளை என்ன செய்வது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம்.
Advertisment
உதிர்ந்த இலைகள், கரிம தாதுக்களின் வளமான ஆதாரமாக இருக்கின்றன. இதன் காரணமாக, அவை உங்கள் மண் மற்றும் தாவரங்களுக்கு சிறந்த உரத்தை வழங்குகின்றன. எனவே, உங்கள் தோட்டத்தை சுத்தம் செய்வதற்கு முன், மரம் செடி, கொடிகளில் இருந்து கீழே விழுந்த காய்ந்த இலைகள், சருகுகளை பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் தொடங்குவதற்கு முன், காய்ந்த இலைகள் சிறந்த உரத்தை உருவாக்கினாலும், அவை முதலில் சேகரிக்கப்பட்டு செயலாக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இலை உரம் எப்படி செய்வது?
Advertisment
Advertisements
உங்கள் தோட்டத்தில் அங்கங்கே கிடக்கும் இலை சருகுகளை சேகரிக்கவும். அதை மற்ற கரிமப் பொருட்களுடன் கலக்கவும். பொதுவாக ஈரமான, புல் போன்ற பச்சைத் தோட்டக் கழிவுகள் மற்றும் உலர்ந்த பழுப்பு நிற இலைகள் ஆகியவற்றை கலந்து உரம் தயாரிக்கவும். காய்ந்த சருகுகளை நசுக்கி போடுவதால் அவை விரைவாக சிதைந்துவிடும், அவற்றை முழுதாக அப்படியே பயன்படுத்தினால், அவை உரமாக இன்னும் நேரம் எடுக்கும்.
உரம் எப்பொழுதும் ஈரமாக இருக்க வேண்டும், மேலும் சிதைவதற்கு உதவும் ஆக்ஸிஜனை அனுமதிக்கும் வகையில் அதை அடிக்கடி கிளறி விட வேண்டும். இதைச் செய்தால், சில உரங்கள் உண்மையில் ஒரு மாதத்திற்குள் பயன்படுத்த தயாராக இருக்கும்.
இலைகளை 2 முதல் 3 அங்குல தடிமனில், மரங்களை சுற்றி பரப்பவும் (Image thedirtbag.com)
இலைகளை உரமாக்க மற்றொரு வழி Leaf mulch. இது ஒரு சிறந்த மண் கண்டிஷனரை உருவாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் தோட்டத்தைச் சுற்றியுள்ள களைகளின் வளர்ச்சியை அடக்கவும் உதவும். "இதைச் செய்வதற்கான மிகச் சிறந்த வழி, இலை துண்டாக்கும் கருவி (leaf shredder) அல்லது mulching இணைப்புடன் கூடிய புல்வெளி அறுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதாகும். நொறுங்கிய இலைகளை 2 முதல் 3 அங்குல தடிமனில், மரங்கள் மற்றும் செடிகளை சுற்றி பரப்பவும்.
கம்பி தொட்டியில் சேமிக்கப்படும் இலைகள் Image: Shutterstock
அதேபோல, Leaf mold மண்ணின் தரம் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்தி, மண்ணில் அதிக நீரைத் தக்கவைக்க உதவுகிறது. இது இலைகளைத் தானாகச் சிதைக்க விடுவது ஆகும்.
Leaf mold உரம் தயாரிக்க, இலைகளை மேலே உள்ள படத்தில் காட்டியபடி சில காற்று துளைகள் கொண்ட ஒரு மரம் / கம்பி தொட்டியில் சேமிக்கவும். அதற்கு முன் அவற்றை ஈரப்படுத்தவும். அவை உலர்ந்தால், அவ்வப்போது சிறிது தண்ணீர் சேர்க்கவும். இது முழுமையாக சிதைவடைய பொதுவாக ஆறு முதல் 12 மாதங்கள் ஆகும், பின்னர் அதை உங்கள் மண்ணில் உரமாக பயன்படுத்தலாம்.
செடிகளை பாதுகாக்க
இலைகள் தாவரங்களுக்கு ஒரு நல்ல இன்சுலேட்டரை உருவாக்கி, குளிர்காலத்தில் உறைபனி மற்றும் கடுமையான வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கும். "செடியை கம்பி வேலியால் சுற்றி, இலைகளால் அதை அடைக்கவும்". வசந்த காலம் வந்தவுடன், நீங்கள் வேலிகளை அகற்றி, இலைகளை எடுத்து, மீண்டும் உரமாக்குவதற்கு அவற்றை மீண்டும் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“