மழைக்காலம் அமைதியாக உட்கார்ந்து இயற்கையை அனுபவிக்க சிறந்த நேரம். மாடித்தோட்டம் அமைப்பதற்கான சிறந்த சூழலும் மழைக்காலம்தான்.
மழைக் காலங்களில் உங்கள் தோட்டங்களில் செழித்து வளரக்கூடிய வெள்ளரி, பீன்ஸ் மற்றும் தக்காளி எப்படி நடவு செய்வது மற்றும் எப்படி வளர்ப்பது என்பது குறித்த விவரங்கள் இங்கே..
வெள்ளரிக்காய் தண்ணீர் மற்றும் சூரியனை விரும்பும் ஒரு சுலபமாக வளரக்கூடிய காய்கறியாகும். வெள்ளரிகள் நிலையான நீர்ப்பாசனம் மற்றும் வெப்பத்தைப் பெறுவதால் அவை ஒரே நேரத்தில் அதிகமாக வளரும். இது கொடி தாவரம் என்பதால், ஒரு சிறிய இடத்தில் கூட எளிதாக செழித்து வளரும்.
வெள்ளரிகளை எவ்வாறு வளர்ப்பது என்பது இங்கே:

போதுமான அளவு சூரிய ஒளியைப் பெறும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஈரமான மற்றும் நன்கு நீர் வடிகட்டிய மண்ணில் வெள்ளரிகள் நன்றாக வளரும். வெள்ளரி விதைகளை 1 அங்குல ஆழத்திலும் 2-3 அங்குல இடைவெளியிலும் ஒரு வரிசையில் நடவும். உங்களிடம் குறைந்த இடம் இருந்தால் அல்லது வெள்ளரிக்காய் கொடிகளை வளர்க்க விரும்பினால், தட்டி வைத்து, அதில் வளர விடவும்.
இந்த தட்டி, ஈரமான தரையில் இருந்து பழங்கள் சேதமடையாமல் பாதுகாக்கும். வெள்ளரிகள் வளர உகந்த வெப்பநிலை 16-32 ° C ஆகும்.
தக்காளி
தக்காளி வளர மிகவும் எளிதானது. வட இந்தியாவில் மழைக்காலத்தில் ஜூன்-ஆகஸ்ட் மற்றும் தென்னிந்தியாவில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தக்காளி பயிரிட ஏற்ற நேரம். தக்காளி ஒரு சூரிய விரும்பி, ஆனால் அவை செழித்து வளர நன்கு வடிகட்டிய மண் தேவை.
தக்காளியை எவ்வாறு வளர்ப்பது என்பது இங்கே:

5-6 மணிநேரம் நேரடி சூரிய ஒளியைப் பெறும் தளத்தைத் தேர்ந்தெடுக்கவும். தக்காளி விதைகளை நன்கு வடிகட்டிய மண்ணில் சுமார் 1/4 அங்குல ஆழத்திலும் 3-4 அங்குல தூரத்திலும் நடவும்.
கரிம உரங்களைக் கொண்டு மண்ணுக்கு உணவளிக்கவும். விதைத்த 10-14 நாட்களில் நாற்றுகள் தோன்ற ஆரம்பிக்கும். தக்காளி விதைகள் முளைப்பதற்கு உகந்த வெப்பநிலை 21 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
அறுவடைக்கு ஏற்ற தக்காளி மிகவும் உறுதியான மற்றும் பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்கும், தண்டு பகுதியைச் சுற்றி சில மஞ்சள் புள்ளிகள் இருக்கும். தக்காளி சிறிய திராட்சை வகைகளில் இருந்து பெரிய ஆரஞ்சு அளவு வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது.
பீன்ஸ்
பீன்ஸ் நடவு செய்வதற்கும், பராமரிப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் மிகவும் எளிதானது, ஒருவேளை நீங்கள் இப்போதுதான் செடிகளை வளர்க்கீறீர்கள் என்றால் உங்களுக்கு ஏற்ற தாவம் இதுதான். பீன்ஸ் மிகவும் சத்தானது என்பது உங்கள் தோட்டத்தில் அவற்றை சேர்க்க இன்னும் ஒரு காரணம்.
பருவமழை காலம் பீன்ஸ் பயிரிட ஏற்ற நேரம்.. பீன்ஸ் வளர குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்கிறது, இதை எப்படி வளர்ப்பது என்பது இங்கே:

பீன்ஸ் சூரியன் மற்றும் நிழல் இரண்டிலும் செழித்து வளரக்கூடியது. உங்கள் விதைகளை நடுவதற்கு அதிக அல்லது பகுதியளவு சூரிய ஒளி உள்ள இடத்தை தேர்வு செய்யவும். உங்கள் தோட்டங்களில் நேரடியாக நடப்பட வேண்டிய சில தாவரங்களில் பீன்ஸ் ஒன்றாகும்.
ஏனென்றால், பீன்ஸ் மிகவும் மென்மையான வேர் அமைப்பைக் கொண்டிருப்பதால், இடமாற்றத்தின் போது எளிதில் சேதமடையலாம். எனவே, நீங்கள் எப்போதும் நேரடியாக தரையில் விதைக்க வேண்டும். விதைகளை ஒன்றுகொன்று குறைந்தது 3 அங்குல இடைவெளி மற்றும் ஒரு அங்குல ஆழத்தில் நடவும்.
அதை முறையாக மண்ணால் மூடி, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சவும். உங்கள் பீன்ஸ் நடவு செய்த 1-2 மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“