மழைக்காலம் அமைதியாக உட்கார்ந்து இயற்கையை அனுபவிக்க சிறந்த நேரம். மாடித்தோட்டம் அமைப்பதற்கான சிறந்த சூழலும் மழைக்காலம்தான்.
மழைக் காலங்களில் உங்கள் தோட்டங்களில் செழித்து வளரக்கூடிய பச்சை மிளகாய், வெண்டை, கத்தரி, சுரைக்காய் எப்படி நடவு செய்வது மற்றும் எப்படி வளர்ப்பது என்பது குறித்த விவரங்கள் இங்கே..
பச்சை மிளகாய்
காரமான பச்சை மிளகாய் இல்லாமல் உணவு முழுமையடையாது. மேலும் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த மிளகாயை நீங்கள் வீட்டில் எளிதாக வளர்க்கலாம். பச்சை மிளகாய் ஈரப்பதம் மற்றும் சூடான காலநிலையில் நன்றாக வளரும். வீட்டில் பச்சை மிளகாயை வளர்ப்பது எப்படி என்பது இங்கே:
மிளகாயை வளர்க்க பகுதி நிழலுடன் கூடிய வெயில் படும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தோட்டத்தில் வளர்ப்பதை விட சிறிய தொட்டியில் மிளகாய் வளர்ப்பது இன்னும் எளிதானது. சரியான வடிகால் துளைகளுடன் சுமார் 3-4 அங்குல ஆழமான தொட்டியை தேர்ந்தெடுக்கவும். நல்ல தரமான விதைகளை எடுத்து தொட்டியில் 1 அங்குல ஆழத்தில் நடவும்.
தினசரி சூரிய ஒளி சுமார் 5-6 மணி நேரம் கிடைக்கும் இடத்தில் பானையை வைக்கவும். தொடர் கவனிப்பு மற்றும் நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் உங்கள் மிளகாய் விதைத்த 50-60 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும்.
கத்தரிக்காய்
கத்தரிக்காயில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. உங்கள் தோட்டத்தில் இந்த செடிகளை வளர்ப்பது மிகவும் எளிதானது. அவற்றை எவ்வாறு வளர்ப்பது என்பது இங்கே:
மற்ற தாவரங்களுடன் ஒப்பிடுகையில் அவை செழிக்க அதிக இடம் தேவைப்படுவதால், ஒரு பரந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஈரமான மண்ணுடன் கூடிய சன்னி ஸ்பாட் உங்கள் கத்தரிக்காய்களை வளர முக்கியமாகும்.
விதைகளை நேரடியாக உங்கள் தோட்டத்தில் நடலாம். விதையை 1 சென்டிமீட்டர் ஆழத்திலும், 15 செ.மீட்டர் இடைவெளியிலும் நடவும். உங்கள் செடிகளுக்கு தவறாமல் தண்ணீர் பாய்ச்சினால் விதைகள் 2-3 வாரங்களில் முளைக்க ஆரம்பிக்கும். சூரியன் மற்றும் நீர் தவிர, கத்தரிக்காய்களுக்கு கூடுதல் ஊரம் தேவையில்லை. நடவு செய்த 1-2 மாதங்களுக்குப் பிறகு உங்கள் கத்திரிக்காய்கள் அறுவடைக்குத் தயாராகும்.
வெண்டை
எளிதில் வளரக்கூடிய இந்த செடியில் வைட்டமின் ஏ அதிகம் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உங்கள் உணவில் ஒரு சிறந்த கூடுதலாகும். உங்கள் தோட்டத்தில் வெண்டை எப்படி வளர்ப்பது என்பது இங்கே:
வெண்டைக்காய் நல்ல சூரிய ஒளியை விரும்புகிறது, எனவே விதைகளை நடவு செய்ய ஒரு சூரிய ஒளி படும் இடத்தை தேர்வு செய்யவும். விதைகளை சுமார் ½ முதல் 1 அங்குல ஆழத்தில், 12-18 அங்குல இடைவெளியில் நடவும். முளைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த, விதைகளை இரவு முழுவதும் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். வளரும் காலம் முழுவதும் தாவரங்களுக்கு நன்கு நீர் பாய்ச்சவும்.
விதைகளை நடவு செய்த 2 மாதங்களுக்குப் பிறகு முதல் அறுவடை தயாராகிவிடும், அது 2 முதல் 3 அங்குல உயரம் இருக்கும் போது வெண்டையை அறுவடை செய்யுங்கள்.
சுரைக்காய்
சுரைக்காய் அதன் வடிவம், நிறம் மற்றும் அளவு என பல வகைகளில் வருகிறது, இவை வளர எளிதானது மற்றும் அதிக கவனம் தேவையில்லை. சுரைக்காய் வளர்ப்பது எப்படி என்பது இங்கே:
நீங்கள் வளர்க்க விரும்பும் வகையைத் தேர்ந்தெடுத்து, 3-4 விதைகளை ஒன்றாக 1-2 அங்குல ஆழத்தில் விதைக்கவும், ஒன்றுக்கொன்று 4-5 அடி இடைவெளியில் நடவும். சுரைக்காய் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டிகளில் நன்றாக வளரும், இது அவற்றை தரையில் படாமல் பார்த்துக் கொள்கின்றன. அவற்றின் நிறம் மற்றும் முதிர ஆரம்பிக்கும் போது, சிறிய காய்களை அறுவடை செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.