scorecardresearch

Gardening Tips: வெட்டுக்கிளி தாக்குதலுக்கு வேப்ப எண்ணெய்.. எப்படி பாருங்க

வெட்டுக்கிளியை புகைப்படம் எடுத்து உழவன் செயலி பூச்சி நோய் கண்காணிப்பு பிரிவில் பதிவேற்றம் செய்து ஆலோசனை பெறலாம்.

Gardening Tips
Gardening Tips

லோகஸ்ட் எனப்படும் வெட்டுக்கிளிகள் பெரும் கூட்டமாக ஒன்றுகூடி பறந்து, ஒரு வயலையோ, ஒரு பெரிய பசுமைப் பரப்பையோ ஒரே நேரத்தில் நாசம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒரு நாட்டில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்த இந்த வகையான வெட்டுக்கிளிகளே போதும் என்றும் கூறப்படுகிறது.

இந்த வெட்டுக்கிளிகளின் பெருக்கத்துக்கும் தாக்கத்துக்கும் புவிவெப்பமும், பருவநிலை மாற்றமும்தான் காரணம் என புவியியல் வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் 250 வகையான உள்ளூர் வெட்டுக்கிளிகள் உள்ளன. இவற்றின் நன்மை செய்யக்கூடிய வெட்டுக்கிளிகளும் உள்ளன. வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால் விவசாயிகள் வேளாண் துறை தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வெட்டுக்கிளியை புகைப்படம் எடுத்து உழவன் செயலி பூச்சி நோய் கண்காணிப்பு பிரிவில் பதிவேற்றம் செய்து ஆலோசனை பெறலாம்.

வெட்டுக்கிளிகள் பொதுவாக ஒரு பெரிய வயல்வெளியில் இருந்து மற்றொன்றுக்கு நகரும். சிறிய தோட்டங்களில் விளைவு அவ்வளவு இருக்காது. இருப்பினும் இங்கு  உங்கள் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அல்லது சமையலறை தோட்டங்களை வெட்டுக் கிளிகளிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது இங்கே!

இது சிறிய செடியாக இருந்தால், நீங்கள் அதை வலை அல்லது துணியால் மூடலாம். பசுவின் சாணம் அல்லது உலர்ந்த வேப்ப இலைகளை வைத்தும் முயற்சி செய்யலாம்.

நீங்கள் வீட்டில் பூண்டு-மிளகாய் ஸ்ப்ரே செய்யலாம். பூண்டு மற்றும் பச்சை மிளகாயை பேஸ்ட் செய்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து உங்கள் செடிகளில் தெளிக்கவும். பூண்டு ஸ்ப்ரே கூட பயன்படுத்தலாம், அதன் வாசனை பூச்சிகளை விரட்டும்.

செடிகளுக்கு சிறிது வேப்ப எண்ணெய் தெளிக்கவும். வேப்ப எண்ணெய், கூட்டு வெட்டுக்கிளிகளின் “தனிமைப்படுத்தலை” ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அவை தனிமையாகவும், சோம்பலாகவும், கிட்டத்தட்ட அசைவற்றுப் போகின்றன, இதனால் பிளேக் நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Gardening tips how to protect kitchen garden from locusts