பிரபல சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ். அழகி, மெல்ல திறந்தது கதவு, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். இப்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார்.
இவர் ஒரு நடனக் கலைஞர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி, மாடலிங், போட்டோஷூட் என கலக்கி வருகிறார். இவரது கணவர் யுவராஜூம் பிரபல நடனக் கலைஞர் தான். இந்த தம்பதிக்கு தருண் என்ற மகன் இருக்கிறான்.
யுவராஜ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பதிவு இப்போது அனைவரையும் கவர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு, திங்கள் கிழமை (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டன.
காயத்ரியின் மகனும் பள்ளியில் படிக்கிறார். இதனால் காயத்ரி காலையில் எழுந்து, சமையல், வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து, தன் மகனை பள்ளிக்கு அனுப்பும் போட்டோவை தான் யுவராஜ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.
’கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு முதல் நாள் !! ஆல் தி பெஸ்ட் சாம்பியன்
மகன் வெற்றி பெற வேண்டும் என்ற முழு அக்கறையுடனும் அன்புடனும் எப்போதும் அம்மா பின்னால் இருப்பாள், காயத்ரி எப்போதும் நல்ல தாய்’ என்று யுவராஜ் அதில் பதிவிட்டுள்ளார்.
இன்ஃபுளூயன்சர், சீரியல் என பிஸியாக இருந்தாலும், ஒரு சாதரண தாயாக காயத்ரி தன் மகனை அன்புடனும், அக்கறையுடன் கவனிப்பதைப் பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil