scorecardresearch

ஒன்று இடைவெளிகளை இணைத்துக் கொண்டே இருந்தது, காதல்!

காயத்ரி தனது 12வது ஆண்டு திருமண விழாவை கணவருடன் தாய்லாந்து நாட்டுக்கு சென்று அங்கு கொண்டாடி உள்ளார்.

Gayathiri Yuvaraj
Gayathiri Yuvaraj

பிரபல சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ். அழகி, மெல்ல திறந்தது கதவு, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். இப்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார்.

இவர் ஒரு நடனக் கலைஞர்.  சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி, மாடலிங், போட்டோஷூட் என கலக்கி வருகிறார். இவரது கணவர் யுவராஜூம் பிரபல நடனக் கலைஞர் தான்.

இந்நிலையில் காயத்ரி தனது 12வது ஆண்டு திருமண விழாவை கணவருடன் தாய்லாந்து நாட்டுக்கு சென்று அங்கு கொண்டாடி உள்ளார்.

அங்கு phi phi தீவில் போட்டிங் சென்ற போது எடுத்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த யுவராஜ், கொண்டாட ஒரு சிறப்பு நாள்!! 12 வருடங்கள்.. இன்றும்!!

இது எங்கள் ஆண்டுவிழா

வாழ்க்கை நமக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது, அதில் ஒன்று இடைவெளிகளை இணைத்துக்கொண்டே இருந்தது ❤ காதல் ❤ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதேபோல, காயத்ரியும் தாய்லாந்து ஜேம்ஸ்பாண்ட் தீவில் யுவராஜூடன் எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இங்கே பாருங்க..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Gayathiri yuvaraj thailand phi phi island james bond island