/indian-express-tamil/media/media_files/2025/10/03/life-2025-10-03-16-51-30.jpg)
நம் வீட்டில் உள்ள 5 பொருட்கள் மூலம் தான் கிருமிகள் அதிகம் பரவுகின்றன
வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது எல்லோரின் ஆசையாக இருக்கும். அதிலும், வீட்டில் உள்ள கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். யாராவது வெளியில் இருந்து நம் வீட்டிற்கு வந்தால் வீடு எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என நினைப்போம். இதனாலேயே பாத்திரம், வீட்டு பொருட்கள் என அனைத்தையும் சுத்தமாக துடைத்து உரிய இடத்தில் வைப்போம்.
இன்னொரு விஷயம் நம் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிருமிகள் நம்மை அண்டாது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டை சுத்தமாக வைத்தாலும் கிருமிகள் நம் வீட்டில் தான் ஒளிந்திருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும். நம் வீட்டின் முக்கியமான இடம் சமையலறை தான். இங்கு தான் நம் முதல் எதிரியை ஒளிந்திருக்கிறது.
அதாவது, நாம் பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச், கிருமிகள் வாழ்வதற்கு ஏற்ற சொர்க்க பூமியாகும். அந்த ஸ்பாஞ்சில் உணவுத் துகள்கள், ஈரப்பதம் இருப்பதால் பாக்டீரியாக்கள் அங்கு லட்சக்கணக்கில் பெருகுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த ஸ்பாஞ்சை வைத்து நாம் பாத்திரம் துலக்கும் பொழுது அவை பாத்திரங்களிலும் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் வயிற்று உபாதைகள் போன்றவை ஏற்படுகின்றன.
இதேபோல், காய்கறி மற்றும் இறைச்சி நறுக்கப் பயன்படுத்தும் பலகையின் கீறல்களுக்குள் கோடிக்கணக்கான கிருமிகள் மறைந்திருக்கும். குறிப்பாக, இறைச்சியை வெட்டிய பின் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், அது மற்ற உணவுப் பொருட்களையும் விஷமாக்கிவிடும். அடுத்ததாக நாம் தினமும் தூங்கும் படுக்கையறை. நமது தலையணை உறை, கழிவறை இருக்கையை விட அதிக பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கிறது.
நமது வியர்வை, உமிழ்நீர் மற்றும் இறந்த சரும செல்கள் ஆகியவை சேர்ந்து, கிருமிகளுக்கு ஒரு மாபெரும் விருந்தளிக்கின்றன. இது முகப்பரு, தோல் அரிப்பு மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமாகிறது. இந்த வரிசையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசியும் இடம்பிடித்துள்ளது. நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் நம்மோடு கைப்பேசியும் பயணிக்கிறது.
ஏன் கழிவறை வரை நம்முடன் கைப்பேசி பயணிக்கிறது. இதில், கழிவறையை விட பத்து மடங்கு அதிகமான கிருமிகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கைகளை சுத்தப்படுத்தாமல் கைப்பேசியைத் தொடுவதால், அது ஒரு நடமாடும் கிருமிக் கூடாரமாகவே மாறிவிடுகிறது. மேலும், நாம் பயன்படுத்தும் தொலைக்காட்சி ரிமோட் மூலமாகவும் கிருமிகள் பரவுகின்றன.
கை அழுக்கு, உணவுப் பிசுக்குகள் போன்றவை அதன் பொத்தான்களுக்கு இடையில் எளிதாகச் சேர்ந்துவிடும். வீட்டில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படுவதால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய்த்தொற்று பரவ இது ஒரு முக்கிய காரணியாக அமைவதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.