நெய் உட்கொள்வதை நீங்கள் இதுவரை தவிர்த்தால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு உணவிலும் ஒரு டீஸ்பூன் நெய் உங்கள் எடை இழப்பு இலக்குகளைத் தடுக்காது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உங்கள் உடலை உள்ளே இருந்து ஊட்டமளிக்கும், இது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும்.
ஒழுங்கற்ற மற்றும் தவறான உணவு முறைகள், திரவங்களின் பற்றாக்குறை, நார்ச்சத்துள்ள உணவு இல்லாமை, உட்கார்ந்த வாழ்க்கை முறை, எனிமா அல்லது மலமிளக்கியின் அதிகப்படியான பயன்பாடு, குடல் கட்டி, தொற்று, உடற்பயிற்சியின்மை, மோசமான தனிப்பட்ட சுகாதாரம், உடல் பருமன் மற்றும் மன அழுத்தம், பதட்டம், பயம், பொறாமை, துக்கம் போன்ற உளவியல் காரணிகளாலும் கூட மலச்சிக்கல் ஏற்படலாம்.
ஆனால் இந்த பிரச்சனைக்கான தீர்வு எளிதில் கிடைக்கக்கூடிய நெய்யில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? மலச்சிக்கல் ஒரு முக்கிய பிரச்சினை மற்றும் பல பின்விளைவுகளை கொண்டுள்ளது.
குடல் நுண்ணுயிர்களின் சமநிலையின்மை, அஜீரணத்திற்கு வழிவகுக்கிறது இதனால் எடை அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மைட்டோகாண்ட்ரியாவின் செயலிழப்புக்கு வழிவகுக்கிறது (நமது உயிரணுக்களுக்குள் உள்ள ஆற்றல் உற்பத்தியாளர்கள்).
மலச்சிக்கலால் ஏற்படும் பக்க விளைவுகள்
*உடலில் இருந்து தேவையற்ற ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றுவதைத் தடுக்கிறது மற்றும் அதன் மறுஉருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து, நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகக்கூடிய நச்சுத்தன்மை மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். தோல், நகங்கள் மற்றும் மனநிலை மற்றும் உடலின் பல அம்சங்களை பாதிக்கிறது.
நெய் எவ்வாறு உதவுகிறது?

இதன் நன்மைகளைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக குடலில் லூப்ரிகண்டாக வேலை செய்வதைப் பொறுத்தவரை, மலச்சிக்கல் பிரச்சனைகளை சமாளிக்க இதை உங்கள் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. மேலும் ஐந்து நிமிட உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் இன்னும் கூடுதல் கலோரிகளை எரிக்கலாம்.
இதை ஒப்புக்கொண்ட ஆயுர்வேத மருத்துவர் டிக்சா பவ்சர், ஆயுர்வேதம்படி நெய் இயற்கையில் மலமிளக்கியாக கருதப்படுகிறது.
பொதுவாக வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் (மலச்சிக்கலை நீக்கும்) அனைத்து மூலிகைகள்/உணவுகளும் ஆற்றலில் சூடாக இருக்கும். ஆனால் நெய் இயற்கையில் குளிர்ச்சியானது, மேலும் இன்னும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது, என்று டிக்சா கூறினார்.
A2 பசு நெய் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, என்று மருத்துவர் டிக்சா பகிர்ந்து கொண்டார். ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுவதற்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பை உடலில் பராமரிக்க இது உதவுகிறது, என்று அவர் மேலும் கூறினார்.
அனைவரும் நெய் சாப்பிடலாமா?
பசு நெய் அனைவருக்கும் சிறந்தது, ஏனெனில் இது எளிதில் ஜீரணமாகும், மேலும் எந்த கவலையும் இல்லாமல் உட்கொள்ளலாம்.
1 டீஸ்பூன் பசு நெய்யை உறங்கும் போது அல்லது காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீருடன் குடித்தால் போதும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பசும்பாலில் 1 டீஸ்பூன் பசு நெய் சிறந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“