இந்த மழைகாலத்தில்சுற்றுலா பயணிகளால் அதிகம் விரும்பப்படும் நகரமாக கோவா உள்ளது என சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்திய சுற்றுலா பயணிகள் மத்தியில் கோவாவிற்கு எப்போதுமே தனித் சிறப்பு தான். குறிப்பாக பருவமழைகாலங்களில் சுற்றுலா செல்வதற்கு கோவா சிறந்த சாய்ஸ் என இந்திய மக்கள் விரும்புவதாக இந்த சர்வே தெரிவிக்கிறது.
இந்த சர்வேவை Hotels.com என்ற இணையதளம் மேற்கொண்டது. அப்போது, பயனர்களிடம் இது சுற்றுலா தொடர்பாக கேள்விகளுடன் சர்வே நடத்தியுள்ளது. இந்த ஆய்வு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு விரும்பும் இடம் குறித்து கேட்கப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளதாவது: பருவ மழைகாலங்களில் சுற்றுலா சென்று தங்குவதற்கு ஏற்ற இடம் கோவா என பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி, கோவாவில் உள்ள காண்டோலிம், காலன்குட், அர்போரா, பாகா ஆகியவை கோவாவை முதலிடத்திற்கு கொண்டுவந்துள்ளன.கடந்த 2016-ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கோவாவில் ஹோட்டல்கள் குறித்து தேடப்படுவது 91-சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல, மும்பை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. மற்ற பகுதிகளான உதய்பூர், பெங்களூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட ஹோட்டல்.காம்-ன் இயக்குநர் ஜெஸ்ஸிகா சுயாங் கூறும்போது: 2017-ம் ஆண்டு பருவமழை சுற்றுலா தொடர்பாக சர்வே எடுக்கப்பட்டதில், இந்திய சுற்றுலா பயணிகள் தாங்கள் எங்கு பயணம் செய்ய விரும்புகின்றனர் என்பது குறித்த விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக இந்த சர்வேயில், இந்திய சுற்றுலா பயணிகளின் குறுகிய கால பயணமாக எந்த பகுதியை தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர் என்பது குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. மேலும், சர்வதேச சுற்றுலா பயணங்களை காட்டிலும், உள்நாட்டு சுற்றுலா பகுதிகளை இந்திய சுற்றுலா பயணிகள் தேர்வு செய்வது அதிகரித்துள்ளது என்று கூறினார்.
மேலும், சர்வதேச குறுகியகால சுற்றுலா பயணத்திற்கு இந்தோனேஷியாவின் பாலி, சிங்கப்பூர், பேங்காக், அந்தமானில் உள்ள புகெட், தாய்லாந்தின் பாட்டயா மற்றும் துபாய் ஆகியவற்றை இந்திய சுற்றுலா பயணிகள் விரும்புவதாக தெரியவந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.