Advertisment

ஒரு பிடி கொய்யா இலை, கொஞ்சம் மஞ்சள்.. முகப்பரு நீங்க இப்படி யூஸ் பண்ணுங்க

உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம்.

author-image
abhisudha
New Update
lifestyle

Guava leaves paste for skincare

கொய்யா, பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யாவின் இலைகளில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளன. இந்த இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

Advertisment

மேலும், உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். கொய்யா இலையை நசுக்கி, முகப்பரு புள்ளிகளில் தடவவும். வறண்ட சருமத்தை  மேம்படுத்துவதற்கும் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்தலாம்.

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்க

தேவையான பொருட்கள்

ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்

ஐந்து தேக்கரண்டி தண்ணீர்

மஞ்சள்- சிட்டிகை

ஒரு தேக்கரண்டி- கற்றாழை ஜெல்

publive-image

வறண்ட சருமத்தை  மேம்படுத்துவதற்கும் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்தலாம்

எப்படி செய்வது?

கொய்யா இலைகள், தண்ணீரை மிக்சி ஜாரில் போட்டு கெட்டியான பேஸ்ட் தயாரிக்கவும். ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் பேஸ்டுடன், ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

டிப்ஸ்: சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment