முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், உச்சந்தலையை மென்மையாக்குவதற்கும் ஒருவரின் தலைமுடிக்கு எண்ணெய் தடவுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் விளக்கெண்ணையை மருத்துவத்துக்கும் இயற்கையான அழகுப் பராமரிப்பிற்காகவும் பயன்படுத்துகிறார்கள். காரணம் அதில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 6 மற்றும் 9 அதிகளவில் உள்ளது. அவை சரும ஆரோக்கியத்துக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது.
எப்படி பயன்படுத்துவது?

1 டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை கலக்கவும். இதை உங்கள் உச்சந்தலையில் நன்கு தடவி, 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்குப் பிறகு நன்கு கழுவவும்.
வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் முடி விரைவில் வளரும்.
விளக்கெண்ணெயில் ரிசினோலிக் அமிலம் மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, எனவே உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது, இது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
தலையில் சிறிய அளவில் வழுக்கை இருந்தால், விரல் நுனியில் சிறிது எண்ணையை எடுத்து, வழுக்கை இருக்கும் இடத்தில் ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் மசாஜ் செய்தால் வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடி வளருவதை கண்கூடாகக் காணலாம்.
மிக முக்கியமாக, மன அழுத்த வேண்டாம், இது முடி உதிர்தலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஓய்வெடுக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் உங்கள் மனதைப் பயிற்றுவிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“