சுத்தமான, ஆரோக்கியமான கூந்தலை நாம் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் நம் வாழ்வில் ஒரு கட்டத்தில், பொடுகுக்கு பயந்திருப்போம்.
ஆயுர்வேத நிபுணர் டிக்ஸா பவ்சர் இன்ஸ்டாகிராமில் ஒரு பயனுள்ள நீங்களே வீட்டில் செய்யக்கூடிய ஹேர் மாஸ்க்கைப் பகிர்ந்து கொண்டார், இது “பொடுகு இல்லாத மென்மையான மற்றும் ஆரோக்கியமான முடிக்கு எளிதான மற்றும் விரைவான வழி” என்று அவர் கூறுகிறார்.
ஹேர் மாஸ்க் எப்படி செய்வது?
ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளவும். அதில் ½ டீஸ்பூன் திரிபலா சூரணத்தை சேர்க்கவும். இரண்டு நிமிடம் நன்றாக கலக்கவும். இதை உச்சந்தலையிலும் முடியிலும் தடவி, 30 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். இந்த ஹேர் மாஸ்க்கை தொடர்ந்து 2-3 மாதங்கள், வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.
டாக்டர் பாவ்சர், இது உச்சந்தலையில் உள்ள செதில்கள், அரிப்பு மற்றும் வறட்சியை விரைவாக நீக்குகிறது என்றார். இது முடி மற்றும் உச்சந்தலையின் pH சமநிலையை மீட்டெடுக்கிறது, உங்கள் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உங்கள் உச்சந்தலை மற்றும் முடி இரண்டின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“