Advertisment

30 நாட்களில் 2 இன்ஞ் முடி வளரும், இந்த ஹேர் ஆயில் யூஸ் பண்ணுங்க- டயட்டீஷியன் வீடியோ

இந்த எண்ணெய், உங்கள் தலைமுடியை 30 நாட்களில் இரண்டு அங்குலம் வளரச் செய்யும்.

author-image
WebDesk
New Update
lifestyle

DIY Hair oil for Hair growth

உங்கள் சருமம் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு தீர்வாக கூறப்படும் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இருப்பினும், வல்லுநர்கள் அத்தகைய வைத்தியங்களை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு பேட்ச் சோதனையை பரிந்துரைக்கின்றனர்.

Advertisment

எனவே, முடி வளர்ச்சிக்கு உறுதியளிக்கும் டயட்டீஷியன் ரிச்சா கங்கானி வீடியோவை பார்த்தபோது, ​​நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெற முடிவு செய்தோம்.

நீங்கள் முடி உதிர்தல் பிரச்சினையால் அவதிப்படுகிறவரா அல்லது புதிய முடி வளர முடியாமல் தவிக்கிறவரா? அப்படியானால், வீட்டில் நீங்களே செய்யக்கூடிய இந்த ஹேர் ஆயிலை முயற்சிக்கவும். இது புதிய முடி வளரவும், 30 நாட்களில் முடி உதிர்வதை நிறுத்தவும் உதவும்.

மேலும், இந்த எண்ணெய், உங்கள் தலைமுடியை 30 நாட்களில் இரண்டு அங்குலம் வளரச் செய்யும், என்றார் கங்கானி.

எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

1 கப் - தேங்காய் எண்ணெய்ப

1 - வெங்காயம், நறுக்கியது

1 - சுரைக்காய், நசுக்கியது

2 டீஸ்பூன் – வெந்தயம்

1 - வைட்டமின் ஈ காப்ஸ்யூல்

 கருஞ்சீரகம் அல்லது எண்ணெய்

கறிவேப்பிலை

 விளக்கெண்ணெய்

கண்ணாடி பாட்டில்

செய்முறை

*ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

*இப்போது நறுக்கிய வெங்காயம், வெந்தயம், கருஞ்சீரகம் அல்லது நைஜெல்லா எண்ணெய், விளக்கெண்ணெய், நசுக்கிய சுரைக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். அனைத்தையும் கலந்து கொதிக்க விடவும்.

எண்ணெய் நல்ல நிறம் மாறியதும் தீயை அணைக்கவும்.

இப்போது எண்ணெய் ஆறியவுடன் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். இந்த எண்ணெய்யில் வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்க்கவும்.

எப்படி அப்ளை செய்வது?

வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை தேய்க்கவும். ஷாம்பு போட்டு குளிப்பதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன் இதைப் பயன்படுத்துங்கள். 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, உங்கள் தலைமுடியை மூடி வைக்கவும். மென்மையான ஷாம்பூவைக் கொண்டு கழுவுங்கள், என்றார் கங்கானி.

இது வேலை செய்யுமா?

சுரைக்காய் பல அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளது. இது அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், உடல் பருமன் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்று தோல் மருத்துவர் வந்தனா பஞ்சாபி கூறினார்.

கருஞ்சீரகத்தில் 'தைமோகுவினோன்' (thymoquinone) என்ற செயலில் உள்ள மூலப்பொருள் உள்ளது, இது நுண்ணுயிர் எதிர்ப்பி, அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளது.

எனவே இது முகப்பரு, தடிப்புத் தோல் அழற்சி, விட்டிலிகோ மற்றும் காயம் குணமாக போன்ற பல தோல் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, என்று டாக்டர் பஞ்சாபி கூறினார்.

கறிவேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

வெந்தயம் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பல்வேறு அறிகுறிகளில் சாத்தியமான மருத்துவ குணங்களுக்காக மிகவும் பிரபலமாக உள்ளன.

இருப்பினும் இவை முடி உதிர்வை நிறுத்தும் அல்லது முடி வளர்ச்சியை மேம்படுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை, என்று டாக்டர் பஞ்சாபி கூறினார்.

எனது மருத்துவ அனுபவத்தின் படி, வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துவது அரிப்பு, தடிப்புகள், தோல் சிவத்தல் மற்றும் சில சமயங்களில் பொடுகு மற்றும் முடி உதிர்வைத் தூண்டும், என்று டாக்டர் பஞ்சாபி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment