முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், உச்சந்தலையை மென்மையாக்குவதற்கும் தலைமுடிக்கு எண்ணெய் தடவுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Advertisment
ஆனால் எண்ணெய்களை வாங்குவதற்குப் பதிலாக, சுத்தமான தேங்காய் எண்ணெயில் சில ஆரோக்கியமான பொருட்களைக் கலந்து, அனைத்து நன்மைகளையும் பெறலாம். இவை உண்மையில் நன்றாக வேலை செய்யும். இங்கு ஆரோக்கியமான கூந்தலுக்கு நீங்களே வீட்டில் சொந்தமாக செய்யக்கூடிய எண்ணெய் உள்ளது.
அதை எவ்வாறு தயாரிப்பது என்பது இங்கே.
தேவையான பொருட்கள்
2 கப் – தேங்காய் எண்ணெய்
½ கப் – எள் எண்ணெய்
½ கப் – விளக்கெண்ணெய்
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
நெல்லிக்காயும் சேர்க்கலாம்
1 டீஸ்பூன் – வெந்தயம்
3-4 – செம்பருத்தி மலர்கள்
ஒரு கைப்பிடி செம்பருத்தி இலைகள்
எப்படி செய்வது?
அனைத்தையும் ஒரு இரும்பு கடாயில் ஒன்றாக கலந்து, எண்ணெய் கருமையாகும் வரை, மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு தீயை அணைக்கவும். சிறிது ஆறவைத்து, வடிகட்டிய பின் கண்ணாடி ஜாடியில் சேமிக்கவும்.
எப்படி அப்ளை செய்வது?
இந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை தடவலாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் அதை தினமும் பயன்படுத்தலாம், எந்த பிரச்சனையும் இல்லை.
உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை இருந்தால் கண்டிப்பா இந்த எண்ணெய் பயன்படுத்துங்க!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“