வாரம் ஒருமுறை யூஸ் பண்ணுங்க; ஹேர் லாஸ் பிரச்னைக்கு ஹோம்மேட் ஷாம்பூ

இந்த ஷாம்பூ, முடி உதிர்தல் மற்றும் பிற முடி பிரச்சனைகளை கவனித்துக் கொள்ளும், மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான, அடர்த்தியான முடியை கொடுக்கும்.

இந்த ஷாம்பூ, முடி உதிர்தல் மற்றும் பிற முடி பிரச்சனைகளை கவனித்துக் கொள்ளும், மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான, அடர்த்தியான முடியை கொடுக்கும்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Homemade shampoo for hair loss at home

நாம் அனைவரும் நீளமான, பளபளப்பான கூந்தலை விரும்புகிறோம். ஆனால் அழுக்கைப் போக்க நீங்கள் உச்சந்தலையில் சேர்க்கும் அனைத்து இரசாயனப் பொருட்களும் அதன் தரத்தை மோசமாக்கும். இதனால்தான் தாய்மார்களும் பாட்டிகளும் கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதை எப்போதும் வலியுறுத்துகின்றனர்.

Advertisment

இங்கு நீங்களே வீட்டில் சொந்தமாக செய்யக்கூடிய ஷாம்பூ உள்ளது.

இந்த ஷாம்பூ, முடி உதிர்தல் மற்றும் பிற முடி பிரச்சனைகளை கவனித்துக்கொள்ளும், மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான, அடர்த்தியான முடியை கொடுக்கும்.

publive-image
Advertisment
Advertisements

தேவையான பொருட்கள்

* 2 டீஸ்பூன் –பேக்கிங் சோடா

* டீ ட்ரீ எண்ணெய் – சில துளிகள்

* 2 டீஸ்பூன் – ஆப்பிள் சைடர் வினிகர்

* 6 டீஸ்பூன் – தண்ணீர்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் கன்சிஸ்டன்சிக்கு வரும் வரை கலக்கவும். உங்கள் தலைமுடியை சிறிது நனைக்கவும்.

பிறகு பேஸ்ட்டை நேரடியாக உச்சந்தலையில் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும். ஐந்து நிமிடம் அப்படியே விட்டு வழக்கமான தண்ணீரில் நன்றாகக் கழுவவும்.

இது எப்படி உதவுகிறது?   

 ஷாம்பூவில் உள்ள பேக்கிங் சோடா, எண்ணெய் முடி உள்ளவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. இது உச்சந்தலையை சுத்தம் செய்து துளைகளை திறக்கும்.

முடியின் தரம் மற்றும் முடி உதிர்வின் அளவைப் பொறுத்து, வாரம் ஒருமுறை இந்த ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். இது உச்சந்தலையில் உள்ள அமில-கார சமநிலையை சரிசெய்ய உதவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: