சருமத்தைப் போலவே, உங்கள் தலைமுடிக்கும் அன்பும் கவனிப்பும் தேவை. கடையில் வாங்கும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். பல தயாரிப்புகள் முடி உதிர்தலில் இருந்து உடனடி நிவாரணம் தருகின்றன, ஆனால் அத்தகைய முடிவுகள் தற்காலிகமானவை மட்டுமே, மேலும் உங்கள் முடி உதிர்வு மோசமாகலாம்.
அதற்குப் பதிலாக இயற்கையான வீட்டு வைத்தியங்களை ஒருவர் தேர்வு செய்யலாம், இவை பக்க விளைவுகள் இல்லாதது.
இங்கு நீங்களே வீட்டில் சொந்தமாக செய்யக்கூடிய ஷாம்பூ உள்ளது.
தேவையான பொருட்கள்
* 100 கிராம் பூந்திக்கொட்டை (Soapnut)
*20 கிராம் சீகைக்காய்
*20 கிராம் உலர வைத்த நெல்லிக்காய்
*2 கப் தண்ணீர்
செய்முறை
முதலில், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காயில் இருந்து விதைகளை அகற்றவும். பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுக்கவும். நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காய் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து, தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும்.அதை ஆற விடவும். பூந்திக்கொட்டையின் அனைத்து கூழ்களையும் பிழிந்து கொள்ளவும்.
ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி (not a fine strainer) ஷாம்பூவை வடிகட்டவும், இதனால் நீங்கள் திக்கான ஷாம்பூ பெறுவீர்கள். இதை பாட்டிலில் சேமிக்கவும்.
இது 100% இயற்கையான ஷாம்பு ஆதலால் கடையில் வாங்கும் ரசாயன ஷாம்புகளின் அளவு நுரை வராது.
இதை பயன்படுத்துவதற்கு முன் முடிக்கு எண்ணெய் தடவ பரிந்துரைக்கப்படுகிறது. சிலர் இந்த ஷாம்பூவைப் பயன்படுத்திய பிறகு தலைமுடி சிறிது வறண்டு போகலாம். அப்ளை செய்யும் போது கவனமாக இருக்கவும். இது உங்கள் கண்களுக்குள் சென்றால், அது உங்களுக்கு எரியும் உணர்வைத் தரும்.
நன்மைகள்
* முடியை பளபளப்பாகவும், பொலிவாகவும் ஆக்குகிறது
* முடி நரைப்பதைக் கட்டுப்படுத்த உதவுகிறது
* சிறந்த முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது
* பொடுகை போக்குகிறது
* உச்சந்தலையில் உள்ள பேன்களை அழிக்க உதவுகிறது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“