வெந்தயத்தில் அதிக புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் உள்ளது, இது முடி உதிர்தல் மற்றும் பொடுகுக்கு எதிராகவும், முடி வறட்சி, வழுக்கை போன்ற பல்வேறு உச்சந்தலை பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் அறியப்படுகிறது.
Advertisment
வெந்தயத்தில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன, இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, உச்சந்தலையை குணப்படுத்துகிறது மற்றும் முடியின் வேர்கள் சேதமடையாமல் தடுக்கிறது.
இதில் அதிக அளவு லெசித்தின் உள்ளது, இது முடியை ஈரப்பதமாக்குகிறது மற்றும் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. வெந்தயம் முடியின் பளபளப்பையும், துள்ளலையும் மீட்டெடுக்க உதவுகிறது.
வெந்தய ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?
2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் குளிர்ந்த இடத்தில் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறவைத்த தண்ணீரைப் பயன்படுத்தி வெந்தயத்தை பேஸ்டாக அரைக்கவும். இதை உங்கள் தலைமுடியின் வேர்களில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு உச்சந்தலையில் சிறிது மசாஜ் செய்து, லேசான ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவுவம். இது உங்கள் தலைமுடிக்கு பிரகாசத்தை அளிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“