உங்கள் தலைமுடியில் ரசாயனங்களைப் பயன்படுத்துவது சிறிது காலத்திற்கு அழகாக இருக்கும், ஆனால் அது மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டவசமாக, இயற்கையானது பலவிதமான முடி பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமல்லாமல், அதன் தரத்தையும் மீட்டெடுக்கிறது. உங்கள் தலைமுடிக்கு புதுவாழ்வு அளிக்க நீங்களே வீட்டில் சொந்தமாக செய்யக்கூடிய வைத்தியம் இங்கே உள்ளது.
கிரீன் டீ மிகவும் பிரபலமாக இருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. இதில் பாலிஃபீனால்கள், வைட்டமின் ஈ, சி மற்றும் சக்திவாய்ந்த ஈஜிசிஜி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இந்த ஊட்டச்சத்துக்களின் ஒருங்கிணைந்த சக்திகள் ஹேர் ஃபாலிக்கிள்ஸின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன மற்றும் ஆரோக்கியமான உச்சந்தலையை ஊக்குவிக்கின்றன.

எப்படி உபயோகிப்பது?
ஒரு கப் காய்ச்சிய கிரீன் டீ மற்றும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க்கைத் தயாரிக்கவும். தேநீர் அறை வெப்பநிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முடியின் வேர்கள் மற்றும் நீளம் முழுவதும் சமமாகப் தடவுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து பிறகு கழுவுங்கள்.
கிரீன் டீயில் இருக்கும் காஃபின் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது, அதே நேரத்தில் அழற்சி எதிர்ப்பு குணங்கள் முடி உதிர்வைக் குறைக்க உதவுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“