ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற விஷயங்கள் நமது தலைமுடியை கடுமையாகச் சேதப்படுத்துகின்றன. இவை அனைத்திற்கும் மேலாகப் பல ரசாயனங்கள் கலந்த எண்ணெய்யைத் தலையில் தேய்ப்பதால் எந்தப் பயனும் இல்லை.
Advertisment
நீங்கள் வீட்டில் சொந்தமாக தூய்மையான தேங்காய் எண்ணெய் தயார் செய்யலாம்.
இந்தத் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம் வேறு பல தலைமுடி தொடர்பான பிரச்சினைகளும் சரியாகும்.
தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
தேவையான அளவு தேங்காய்களை உடைத்து அதை முழுவதுமாக துருவி எடுத்துக் கொள்ளவும். இந்த தேங்காய்த் துருவல்களை தண்ணீர் ஊற்றாமல் நன்கு மையாக அரைத்து ஒரு துணியில் போட்டு, நன்கு பிழிந்து தேங்காய்ப் பால் எடுக்கவும்.
மீந்த சக்கைகளில் சிறிது வெந்நீர் ஊற்றி முழுத் தேங்காய் பாலையும் பிழியவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில், தேங்காய்ப் பாலை ஊற்றிக் மிதமான தீயில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை கொதிக்க வைக்கவும். பாலின் நிறம் வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும். அடி பிடிக்கும் வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக கிளறிக் கொண்டே இருக்கவும்
பின்னர் தீயை அணைத்துவிட்டு இந்த பாத்திரத்தை ஓரமாக வைத்து ஆறவிடவும். ஒரு சுத்தமான துணியில் வடிகட்டி, கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
இந்த எண்ணெய்யைத் தலையில் தேய்த்து வந்தால் நிச்சயம் உங்கள் முடி வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றத்தைப் பார்க்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“