உங்க தலைமுடிக்கு ஆழமான கண்டிஷனிங் கொடுக்க தேங்காய் பால்

தேங்காய் பாலில் கொழுப்புகள், புரதங்கள், சோடியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தேங்காய் பாலில் கொழுப்புகள், புரதங்கள், சோடியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

author-image
abhisudha
New Update
lifestyle

Coconut milk for hair growth

தேங்காய் பால் சுவையானது. இது ஆரோக்கியத்திற்கும் பெரிதும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், எல்லாவற்றையும் விட, இது முடிக்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டுள்ளது, எனவே, உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் இதை நீங்கள் சேர்க்க வேண்டும்.

Advertisment

தேங்காய் பாலில் கொழுப்புகள், புரதங்கள், சோடியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இவை அனைத்தும் சேர்ந்து உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். வைட்டமின் ஈ மற்றும் கொழுப்புகள் இருப்பதால், முடி எல்லா நேரங்களிலும் ஆழமான கண்டீஷனில் இருப்பதை உறுதி செய்கிறது.

தேங்காய் பால்

Advertisment
Advertisements
publive-image

புதிய தேங்காயை உடைத்து துருவி, அதன் பாலை ஒரு துணியைப் பயன்படுத்தி பிழியவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தேங்காய் பாலை ஊற்றவும். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் அதை கொதிக்க வைக்கவும். பால் கொதித்ததும் அடுப்பை அணைத்து குளிர்விக்க விடவும். இரவு முழுவதும் பிரிசரில் வைக்கவும்.

எப்படி அப்ளை செய்வது?

¼ கப் பாலை சூடாக்கி, சிறிது சூடாக இருக்கும் போது, ​​அதை நேரடியாக உச்சந்தலையில் 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். பால் ஒரு கண்டிஷனராகவும் செயல்படுகிறது.

ஷவர் கேப்பை எடுத்து குறைந்தது ஒரு மணி நேரமாவது உங்கள் தலையை மூடி வைக்கவும். முடிந்ததும், வழக்கமான மைல்ட் ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியைக் கழுவவும், வித்தியாசத்தைக் கவனிக்கவும்.

சிறந்த முடிவுகளுக்கு, வாரத்திற்கு ஒருமுறை இதைச் செய்யுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: