Advertisment

தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்கிறதா? தோல் மருத்துவர் பரிந்துரைக்கும் 3 DIY ஹைட்ரேட்டிங் ஹேர் மாஸ்க்

ஹேர் மாஸ்க் முடி இழையின் க்யூட்டிகிளில் ஒரு கோட்டிங்கை உருவாக்குகின்றன, இதனால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் தோன்றும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Hydrating hair masks

பருவம் மாறியதால் சிலருக்கு தலைமுடியும், சருமத்திலும் வித்தியாசம் நிகழலாம். 

Advertisment

தலையில் அரிப்பு, பொடுகு மற்றும் முடி உதிர்வை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். இந்த முடி நோய்களை எவ்வாறு சமாளிப்பது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் முடி பராமரிப்பு பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு தீர்வு ஹேர் மாஸ்க் ஆகும்.

தோல் மருத்துவர் ஆஞ்சல் பந்தின் கூற்றுப்படி, முடி இழைகளில் ஒரு கோட்டிங் அமைப்பதன் மூலம், ஹேர் மாஸ்க்குகள் பளபளப்பை மீட்டெடுக்கிறது மற்றும் க்யூட்டிகல்களின் பிளவைக் குறைக்கிறது.

ஹேர் மாஸ்க் முடி இழையின் க்யூட்டிகிளில் ஒரு கோட்டிங்கை உருவாக்குகின்றன, இதனால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் தோன்றும், அத்துடன் ஃபிரிக்ஷ்ன் மற்றும் ஃபிரீஸ் ஆகியவற்றைக் குறைக்கிறது, என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

தேங்காய் எண்ணெய், அவகடோ, முட்டை மற்றும் தயிர் ஆகியவற்றைக் கொண்ட ஹேர் மாஸ்க் பயன்படுத்த அவர் பரிந்துரைக்கிறார், ஏனெனில் அவை நீரேற்றத்திற்கு சிறப்பாக செயல்படுகின்றன.

ஹேர் மாஸ்க்குகளுக்கு ஒவ்வாமை அரிதாக இருந்தாலும் கூட, சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், இந்த ஹேர் மாஸ்க்குகளைத் தவிர்க்குமாறு பாந்த் அறிவுறுத்துகிறார், இது அடோபிக் டெர்மடிடிஸ், செபொர்ஹெக் டெர்மடிடிஸ், ஸ்கால்ப் சொரியாசிஸ் அல்லது ஸ்கால்ப் ஃபோலிகுலிடிஸ் போன்ற செயலில் உள்ள உச்சந்தலையின் நிலைகளுக்கு வழிவகுக்கும்.

தோல் மருத்துவர் பரிந்துரைத்த 3 DIY ஹேர் மாஸ்க்குகள் இங்கே உள்ளன.

தயிர், தேன் மற்றும் முட்டை மாஸ்க்

publive-image

ஒரு கிண்ணத்தில் தயிர், ஒரு முட்டை மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளுமாறு பாந்த் பரிந்துரைக்கிறார். இதை நன்கு பேஸ்டி கன்சிஸ்டன்சியில் கலந்து, உங்கள் முடி இழைகளில் சீராக தடவவும். 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, தலைமுடியில் ஷாம்பு போடுவதற்கு முன் குளிர்ந்த நீரில் கழுவவும்.

வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர்மாஸ்க்

publive-image

எந்தவொரு ஹேர் மாஸ்க்கிலும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த யோசனையாகும், ஏனெனில் இது குறைந்த மூலக்கூறு எடையைக்( low molecular weight) கொண்டுள்ளது மற்றும் முடி இழைகளில் நன்றாக ஊடுருவி ஷாம்பு செய்யும் போது முடிக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கிறது.

வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசிக்கவும். ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, உங்கள் தலைமுடியில் சமமாக தடவவும். லேசான ஷாம்பூவைக் கொண்டு கழுவவும்.

உங்களில் பொடுகு பிரச்சினைகள் உள்ளவர்கள், ஹேர் மாஸ்கில் சர்க்கரையைச் சேர்க்கலாம், ஏனெனில் பார்டிக்கிள்ஸ், உங்கள் உச்சந்தலையை எக்ஸ்ஃபாலியேட் செய்யலாம் மற்றும் செதில்களை நீக்கலாம்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் அவகடோ மாஸ்க்

publive-image

பாந்தின் கூற்றுப்படி, அவகடோ பழங்கள் நம் தலைமுடிக்கு மிகவும் ஈரப்பதம் மற்றும் ஊட்டமளிக்கும்.

இந்த ஹேர் மாஸ்க்கு, அவகடோ பழத்தை பிசைந்து கொள்ளவும். 1/4 கப் ஆலிவ் எண்ணெயுடன் கலக்கவும், இதை உங்கள் தலைமுடியில் வேர் முதல் நுனி வரை தடவவும். 30 நிமிடங்களில் கழுவவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment