நெல்லிக்காய் பழைய காலத்தில் இருந்து முடி பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. நெல்லியில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
Advertisment
நெல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் ரத்த சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது, இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது, இறந்த செல்களை அகற்றுகிறது. இதனால் புதிய முடி செல்கள் உருவாகின்றன.
எப்படி உபயோகிப்பது?
சில நெல்லிக்காய் எடுத்து பேஸ்ட்டாக அரைத்து சாறு பிழியவும். நெல்லிக்காய் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து, அதை நேரடியாக உச்சந்தலையில் தடவுவதன் மூலம் ஹேர் டானிக் தயார் செய்யலாம்.
இதை உச்சந்தலை மற்றும் முடியில், நன்றாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, லேசான ஷாம்பூவைக் கொண்டு, கண்டிஷனரைப் பயன்படுத்தி கழுவவும்.
நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையுடன் கூடிய ஹேர் டானிக் உச்சந்தலையில் நன்றாக வேலை செய்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ஒரு சுத்தமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதனுடன் சில நெல்லிக்காய் துண்டுகள் சேர்த்து, எண்ணெய் நிறம் மாறும் வரை காத்திருக்கவும். நெல்லி எண்ணெயை பாதாம் எண்ணெயுடன் கலக்கலாம், இது முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த முடி டானிக் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“