கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அரிசி தண்ணீர் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானில் ஹெயன் காலத்தில் (794 முதல் 1185 வரை) பெண்கள் தரையை தட்டும் அளவுக்கு நீளமான முடியைக் கொண்டிருந்தனர், அவர்கள் அரிசி நீரில் குளித்து ஆரோக்கியமாக இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அரிசி நீரைப் பயன்படுத்துவது முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், முடி முன்கூட்டியே வயதாவதையும் தாமதப்படுத்துகிறது.
புளித்த அரிசி நீர்
அரிசியில் நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, ஆனால் அதை தண்ணீரில் சமைப்பதால், தண்ணீரை பிரித்தெடுத்தவுடன் ஊட்டச்சத்துக்கள் நீக்கப்படுகின்றன. அரிசி நீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளது.
2012 ஆம் ஆண்டு ஆய்வின்படி, புளிக்கவைக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி மற்றும் தோல் செல் சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது, அதனால்தான் அவை பொதுவான அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
அரிசி தண்ணீர் எப்படி செய்வது?

அரிசியை நன்றாக கழுவவும். ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய அரிசியை போடவும். அதை 12 மணி நேரம் அறை வெப்ப நிலையில் ஊற வைக்க வேண்டும். பின்னர், தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் சேமிக்கவும். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தவும். இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து முடி மற்றும் சருமத்துக்கு ஸ்பிரேயாகவும் பயன்படுத்தலாம்.
நன்மைகள் என்ன?
புளித்த அரிசி நீரில் உள்ள குறைந்த pH மதிப்பு மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குவதுடன், பளபளப்பையும் சேர்க்கிறது. உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தின் கடைசி படியாக இது பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
இது உங்கள் கூந்தலை மிருதுவாகவும், பளபளப்பாகவும் ஆக்குகிறது, மேலும் நீண்ட முடியில் இருந்து சிக்கை எளிதில் அகற்ற உதவுகிறது.
இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற அலன்டோயின் உள்ளது, அத்துடன் புரோட்டீன்கள் முடி தண்டை வலுப்படுத்தவும், விரிசல்களை சரிசெய்யவும் உதவும்.
அரிசி நீர் ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது. ஷாம்பு போட்ட பிறகு, அரிசி தண்ணீரை உங்கள் தலைமுடியில் தடவவும். 15-20 நிமிடங்களுக்கு இயற்கையாக உலர வைக்கவும், பின்னர் சாதாரண நீர் கொண்டு கழுவவும். புளித்த அரிசி நீரில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, இது முடிக்கு மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“