நாம் அனைவரும் நீளமான, பளபளப்பான கூந்தலை விரும்புகிறோம். ஆனால், அழுக்கைப் போக்க நீங்கள் உச்சந்தலையில் சேர்க்கும் அனைத்து இரசாயனப் பொருட்களும் அதன் தரத்தை மோசமாக்கும். இதனால்தான் தாய்மார்களும் பாட்டிகளும் கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதை எப்போதும் வலியுறுத்துகின்றனர்.
Advertisment
அதில் ஒன்று தான் செம்பருத்தி. இது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, முன்கூட்டிய நரைப்பதை நிறுத்துகிறது. முடியை கருமையாக்குகிறது மற்றும் சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. வழுக்கைத் திட்டுகளை மறைக்கிறது. வறட்சி மற்றும் பொடுகை எதிர்த்துப் போராடுகிறது.
உங்கள் மந்தமான கூந்தலை உயிர்ப்பிக்க நீங்களே தயார் செய்யக்கூடிய எண்ணெய் ரெசிபி இதோ!
கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவது எப்போதும் நல்லது
Advertisment
Advertisements
செம்பருத்தி எண்ணெய் எப்படி செய்வது?
செம்பருத்தியில் வைட்டமின் ஏ, சி, பாஸ்பரஸ், ரைபோஃப்ளேவின், கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது முடிக்கு ஊட்டமளிக்கிறது. கூந்தல் உடைவதை தடுத்து, உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகின்றன.
செய்முறை
½ கப் செம்பருத்தி இலைகள் மற்றும் 2 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளவும். குளிர்ந்த நீரில் கழுவி நிழலில் உலர வைக்கவும்.
அடுப்பில் இரும்பு கடாய் வைத்து, அதில் ¼ கப் ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் மற்றும் ¼ கப் பாதாம் எண்ணெய் சேர்க்கவும். உலர்ந்த செம்பருத்தி இதழ்கள் மற்றும் இலைகளைச் சேர்த்து சூடாக்கத் தொடங்குங்கள்.
குறைந்த தீயில் 5 நிமிடங்கள் சூடாக்கி, குளிர விடவும்.
குளிர்ந்த எண்ணெயை வடிகட்டி, பாட்டிலில் ஊற்றி, குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் எண்ணெயை சிறிது சூடாக்கவும்.
இந்த ஹேர் ஆயிலை, சேதமடைந்த முடி, சீக்கிரம் நரைத்தல் மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் பயன்படுத்தலாம். இது முடி வளர்ச்சியைத் தூண்டவும், உச்சந்தலையை குளிர்விக்கவும், உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் கருமையாகவும் மாற்ற உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“