க்ளாஸிக், பஸ், சைடு ஷார்ட்… மெல்லிய தலைமுடிக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள்

பலருக்குத் தலைமுடியின் அடர்த்தி குறையக் குறைய அவர்கள் மீது இருக்கும் நம்பிக்கையும் ஏனோ சேர்ந்தே குறையும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சினையைச் சுலபமாகக் கடக்கலாம். அதற்கான டிப்ஸ்களை முதலில் பார்க்கலாம்

By: September 23, 2020, 9:25:51 AM

Men’s Hairstyles for Thin Hair: தரையிலோ டவலிலோ ஒரே ஒரு முடியைப் பார்த்துவிட்டாலும் போதும், பாதம் எண்ணெய் முதல் ஆலிவ் எண்ணெய் வரை சந்தையில் இருக்கிற எல்லா எண்ணெய்களும் அடுத்து நம் தலையில்தான் மிதக்கும். அந்த அளவிற்குத் தலைமுடியின் மீது ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசை அதிகம். ஒரு முடி நரைத்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மனம். இது எல்லாவற்றையும்விட பெரிய கவலை, ‘நமக்குத் தலைமுடி அடர்த்தியாக இல்லையே!’ என்பதுதான்.

ஆனால், மெல்லிய தலைமுடி கொண்டவர்களும் ஸ்டைலிஷ் ஹேர்ஸ்டைல் பெறுவதற்குச் சந்தையில் கிடைக்கும் ஏதோ பொருள்களை வாங்கி உபயோகிக்கவேண்டும் என்பது அவசியமில்லை. நம் தலைமுடிக்கு ஏற்ப சரியான ஹேர்கட் செய்தாலே போதும். பெர்ஃபெக்ட் லுக் பக்காவாகக் கிடைக்கும். மெல்லிய முடிகளுக்கு ஏற்ற ஆண்களுக்கான மூன்று ஹேர்கட்களின் தொகுப்பு இதோ.

பலருக்குத் தலைமுடியின் அடர்த்தி குறையக் குறைய அவர்கள் மீது இருக்கும் நம்பிக்கையும் ஏனோ சேர்ந்தே குறையும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சினையைச் சுலபமாகக் கடக்கலாம். அதற்கான டிப்ஸ்களை முதலில் பார்க்கலாம்

ஸ்டைலிங் டிப்ஸ்:

*இப்பொழுதெல்லாம் ஆண்களும் தலைமுடியை நீளமாக வளர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், மெல்லிய தலைமுடி உடையவர்கள் இதை ட்ரை செய்து பார்க்கவேண்டாம். எந்த அளவிற்கு முடியின் அளவைக் குறைத்துக்கொள்ள முடியுமோ அந்த அளவிற்குக் குறைப்பது பெட்டர்.
ஏனென்றால் நீளமாக வளரும்போது உங்களின் தலைமுடி தோற்றம் மேலும் மெலிதாகக் காணப்படும்.

*நிச்சயம் முடியை ஒன்றாகப் பிணைக்கும் ‘ஜெல்’ வகைகளைப் பயன்படுத்தவே கூடாது. அதேபோன்று ‘கிரீஸி (Greasy) பொருள்களை தவிர்ப்பதும் சிறந்தது.

*கலைந்திருக்கும் மெஸ்ஸி (Messy) அல்லது கூர்மையான ஹேர்கட்டைத் தேர்வுசெய்யலாம்.

*மிளிரும் பொருள்களில்லாமல் மேட் (Matte) ஃபினிஷ் செய்யப்பட்ட கூந்தல் பராமரிப்புப் பொருள்களை உபயோகிக்கலாம்.

*முகத்தில் இருக்கும் தாடி மெல்லிய தலைமுடியைச் சீராக வைத்திருக்கும் மாயை உருவாக்கும். எனவே, தாடி வளர்த்துக்கொள்ளலாம்.

*சிலர் அவ்வப்போது தலைமுடியை ப்ரஷ் (Brush) அல்லது சீப்பு வைத்துச் சீவிக்கொண்டே இருப்பார்கள். மெல்லிய தலைமுடி கொண்டவர்கள் நிச்சயம் இந்த செயலைத் தவிர்க்கவேண்டும்.

மெலிதான தலைமுடி மட்டுமில்லாமல் முடி உதிரும் பிரச்சினையும் இருந்தால், அவர்களுக்கென இருப்பது சரியான ஹேர்ஸ்டைல் மட்டும்தான். இதனை, திசைதிருப்பும் தந்திரம் என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட ஹேர்ஸ்டைல்களை பார்ப்போமா!

சைடு ஷார்ட் கட் (Side Short Cut):

ஆண்களின் க்ளாஸி ஹேர்ஸ்டைல் இது என்றே சொல்லலாம். தலையின் இரண்டுப் பக்கம் மற்றும் பின்பக்கத்தில் தலையோடு ஒட்டியபடி முடியை வெட்டிக்கொள்வதுதான் சைடு ஷார்ட் கட். அடர்த்தியான முடிகளைவிட மிகவும் மெல்லிய முடிகளைக்கொண்டிருப்பவர்களுக்குதான் இந்த ஹேர்கட் பொருந்தும். உச்சந்தலையின் மெல்லிய முடிகளை முற்றிலும் மறைத்து, பார்ப்பவர்களைத் திசைதிருப்பும் விதமாக இந்த ஹேர்கட் இருக்கும். மேலும், இந்த பேசிக் கட்டோடு மேட் பினிஷ் கூந்தல் பராமரிப்புப் பொருள்களை உபயோகித்தால் டபுள் பெனிஃபிட்.

பஸ் கட் (Buzz Cut):

தலைமுடியை முழுமையாக நறுக்கிவிடாமல், ஆங்காங்கே அதாவது சீரற்ற முறையில் முடிகளை வெட்டிக்கொள்வதுதான் பஸ் கட். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் சாய்சாக இது இருக்கிறது. சரிசமமான ஹேர்கட்களை விட இதுபோன்ற சீரற்ற ஹேர்கட் வித்தியாசத் தோற்றம் தருவது மட்டுமில்லாமல், மெல்லிய முடிகளையும் மறைப்பது போன்ற மாயை உருவாகும். இந்த ஹேர்ஸ்டைலோடு stubble வகை தாடி வைத்துக்கொள்ளலாம். மேலும், அவ்வப்போது முடிகளை கண்டிஷனிங் செய்வதும் அவசியம். இந்த பஸ் கட்டில் டெக்ஸ்ட்சர் (Texture) மற்றும் ஸ்வெப்ட் பேக் (Swept Back) என வித்தியாச வகைகளும் இருக்கின்றன. ஸ்மார்ட் தோற்றத்திற்கு இவை கியாரண்டி.

கிளாசிக் கட் (Classic Cut):

இந்த கட் நிச்சயம் அனைவர்க்கும் பரீட்சயமானதுதான். நம்ம ஊரு ‘மிலிட்டரி கட்’தான் இது. தலையின் கீழ்நோக்கி மெல்லிய முடிகள் இருப்பவர்கள், உச்சந்தலைப் பகுதியில் முடி இருக்கும் வகையில் திருத்தம் செய்தால் மெலிதானத் தோற்றம் மறையும். அதேபோன்று, மெல்லிய முடிகள் உச்சந்தலையிலிருந்து நெற்றிப்பகுதி வரை நீண்டிருந்தால் மெஸ்ஸி கட் சிறந்த சாய்ஸ். ஜெல் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. அப்படி உபயோகித்தாலும், மிதமான அழுத்தம் கொடுக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Mens perfect hairstyles for thin hair

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X