நண்பர்கள் தினம்: இந்த வாழ்த்துகளை அனுப்பி உங்கள் நண்பர்களை மகிழ்வியுங்கள்

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகளாகவோ, வாழ்த்து செய்திகளாகவோ, பகிர்ந்துக் கொள்ளக்கூடிய நட்புகள் குறித்து சிறந்த வாழ்த்துகளை

இன்று நண்பர்கள் தினம். வேறு எந்த உறவுகளுக்கும் இல்லாத சிறப்பம்சமே நம் நண்பர்களை நாமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான். நண்பர்கள் எப்போதுமே அற்புதமானவர்கள்தான். அப்படியான நம் நண்பர்களுக்கு ‘நண்பர்கள் தினம்’ அன்று வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகளாகவோ, வாழ்த்து செய்திகளாகவோ, நிலைத்தகவல்களாகவோ பகிர்ந்துக் கொள்ளக்கூடிய நட்புகள் குறித்து சிறந்த வாழ்த்துகளை இங்கு காண்போம்.

1. பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம், ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது கடினம். பணம் தேய்ந்துகொண்டே செல்லும். ஆனால், நண்பர்கள் நம்மை ஊக்கப்படுத்தி மேம்படுத்திக் கொண்டே இருப்பர்.

2. உனக்கு அறிவுரை வேண்டும் என்றால், எனக்கு குறுஞ்செய்தி அனுப்பு. உனக்கு நண்பன் வேண்டும் என்றால் என்னை தொடர்புகொள். உனக்கு நான் தேவைப்பட்டால் வந்து என்னை சந்தி. உனக்கு பணம் வேண்டும் என்றால் மட்டும், ”நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்.”. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

3. கடவுள் மிக அற்புத்மானவர். அதனால்தான், அவர் நண்பர்களுக்கு விலைப்பட்டியலுடன் அனுப்பவில்லை. அவ்வாறு செய்திருந்தால், நான் உன்னை பெற்றிருக்க முடியாது. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

4. நண்பர்கள் மாம்பழங்களை போன்றவர்கள். யார் இனிப்பார், யார் இனிக்கமாட்டார் என்பது தெரியாது. ஆனால், நான் அதிர்ஷ்டம் நிறைந்தவர். நான் உன்னிடம் மிக இனிப்பான மாம்பழங்களை கண்டிருக்கிறேன்.

5. நட்பு என்பது விளையாடுவதற்கான விளையாட்டு அல்ல,
சொல்வதற்கான வார்த்தை அல்ல,
மார்ச் மாதத்தில் துவங்கி மே மாதத்தில் நட்பு முடியாது,
நட்பு நாளை, நேற்று, இன்று, எப்பொழுதும்.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

6. நட்பு என்பது கம்ப்யூட்டர் போன்றது;
நான் உன் வாழ்க்கையில் ‘எண்டர்’ ஆனேன்,
என் இதயத்தில் உன்னை ‘சேவ்’ செய்தேன்,
உன் பிரச்சனைகளை ‘ஃபார்மட்’ செய்தேன்,
& என்னுடைய ‘மெமரியிலிருந்து’ உன்னை எப்பொழுதும்
‘டெலீட்’ செய்ய மாட்டேன்!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

7. எல்லோராலும் இனிமையான வார்த்தைகளை பேச முடியும்,
எல்லோராலும் இனிப்பான சாக்லேட்டுகளை வாங்க முடியும்,
எல்லோராலும் அருமையான ரோஜாப்பூவின் வாசனையை உணர முடியும்,
ஆனால், உன்னைப்போல அருமையான நபர் எல்லோருக்கும் நண்பராக முடியாது.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் அன்பே.

×Close
×Close