Advertisment

Happy Teachers Day 2023: இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்; மெசேஜ், படங்கள் இங்கே!

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Teacher’s Day Wishes 2023

Happy Teacher’s Day Wishes 2023

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

Advertisment

அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக' கொண்டாடுகிறோம்.

வெறுமனே ஊதியத்திற்காகச் செய்கின்ற பணி அல்ல ஆசிரியர் பணி. எவ்வளவு காலமானாலும், ''இவரிடம்தான் நான் கல்வி கற்றேன். இவரால்தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்தேன்'' என்று நினைவுகூர்ந்து போற்றப்படும் மகத்தான பணியே ஆகச் சிறந்த ஆசிரியர் பணி.

வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத் தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள்தான்.

அத்தகைய ஆசிரியர் சமுதாயத்திற்கு உங்கள் இதயமார்ந்த வாழ்த்துக்களைக் கூற இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், மெசேஜ் மற்றும் படங்கள் இதோ

Happy Teacher’s day 2023 Wishes

"குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்

உலகியல் அறிவோடு உயர்குண மினையவும்

அமைபவன் நூலுரை ஆசிரியன்னே"

என்று நன்னூல் ஆசிரியர்க்கு இலக்கணம் வகுத்துள்ளது.

நிலம், மலை, நிறைகோல், மலர் போன்றவை உணர்த்தும் பொறுமை, உயர்வு, நடுவுநிலைமை, அனைவராலும் மதிக்கக்கூடிய பண்பு ஆகியவை கைக்கூடியவராக ஆசிரியருக்கு மேன்மை தருவனவாகும்.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்

Happy Teacher’s day 2023 Wishes

மாணவர்களின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கு, மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

Happy Teacher’s day 2023 Wishes

ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும் காரணமாகத் திகழும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.

Happy Teacher’s day 2023 Wishes

நாட்டின் அறிவுவளத்தை உருவாக்கும் அற்புதமான பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள். சிறப்புவாய்ந்த இந்நாளில் நம்முடைய ஆசிரியர்களை நன்றியுடன் வணங்குவோம்.

Happy Teacher’s day 2023 Wishes

அறிவின் வளர்ச்சிக்கான கல்வியையும், வாழ்வில் உயர்வதற்கான வழிமுறைகளையும் போதிக்கும் ஆசானை நினைவுகூர்ந்து நன்றி சொல்லும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment