உங்கள் உணவில் முடிந்தவரை ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதை உறுதிப்படுத்துவது நல்லது. சட்னி, ஒரு சுவையான மற்றும் பிரபலமான சைட் டிஷ் என்பதை தவிர ஒருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சட்னிகள் ஊட்டச்சத்துக்களின் சக்தியாக அறியப்படுகிறது.
ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா பகிர்ந்த ஒரு சுவையான தக்காளி பூண்டு சட்னி இங்கே.
தேவையான பொருட்கள்
1 - தக்காளி
4 - பூண்டு பற்கள்
1 - பச்சை மிளகாய்
½ தேக்கரண்டி - கடுகு எண்ணெய்
உப்பு- ஒரு சிட்டிகை
சர்க்கரை- 1 சிட்டிகை
செய்முறை
* தக்காளி, பூண்டு மற்றும் மிளகாயை ஒன்றாக சேர்த்து லேசாக வறுக்கவும்.
*கடுகு எண்ணெய், உப்பு, சர்க்கரை சேர்த்து பேஸ்ட் போல் பிசைந்து கொள்ளவும்.
நீங்கள் ஏன் தக்காளி பூண்டு சட்னி சாப்பிட வேண்டும்?
தக்காளி வைட்டமின்கள் மற்றும் குளுதாதயோனை(glutathione) வழங்குகிறது, மேலும் புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்க உதவுகிறது.
பூண்டு, இது ஒரு ப்ரீபயாடிக், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மறக்காமல் இந்த சட்னி ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“